Home /News /national /

3-வது அணிக்கு முயற்சிக்கும் சந்திரசேகர ராவ்: நவீன் பட்நாயக் உடன் சந்திப்பு

3-வது அணிக்கு முயற்சிக்கும் சந்திரசேகர ராவ்: நவீன் பட்நாயக் உடன் சந்திப்பு

சந்திரசேகர ராவ் - நவீன் பட்நாயக்

சந்திரசேகர ராவ் - நவீன் பட்நாயக்

அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம் என்றும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் தெரிவித்தனர்.

  • News18
  • Last Updated :
பாஜக, காங்கிரசுக்கு மாற்றாக தேசிய அளவில் 3-வது அணி அமைப்பது தொடர்பாக ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்தார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத 3-வது அணியை உருவாக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் புறப்பட்டுள்ளார். இதற்காக ஒடிசா முதல் உத்தரப்பிரதேசம் வரையிலான நீண்ட பயணத்தை தொடங்கினார்.

Chandrasekhar Rao | சந்திரசேகர் ராவ்
சந்திரசேகர் ராவ்


இந்நிலையில் நேற்று புவனேஷ்வரில் நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக, காங்கிரசுக்கு மாற்றாக வலிமையான 3-வது அணியை அமைக்க மாநில கட்சிகளின் கூட்டணி அவசியம் தேவை என கூறினார். அதற்கு அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம் எனவும், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் எனவும்,  ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் தெரிவித்தனர்.

மம்தா பானர்ஜி


மேலும் சந்திரசேகர ராவ் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோரையும் சந்திக்க  திட்டமிட்டுள்ளார்.

Also see... குடும்ப ஆட்சியின் அரியணைக்காக சேர்ந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Chandrashekar Rao

அடுத்த செய்தி