காஷ்மீர் மறுசீரமைப்பு! காங்கிரஸின் முக்கியத் தலைவர் வரவேற்பு

காங்கிரஸின் மூத்த தலைவர்கள் ஜனார்த்தன் திரிவேதி, தீபிந்தர் ஹூடா ஆகியோர் பா.ஜ.கவை முடிவை வரவேற்றுள்ளனர்.

news18
Updated: August 6, 2019, 9:12 PM IST
காஷ்மீர் மறுசீரமைப்பு! காங்கிரஸின் முக்கியத் தலைவர் வரவேற்பு
ஜோதிராதித்ய சிந்தியா
news18
Updated: August 6, 2019, 9:12 PM IST
ஜம்மு காஷ்மீர் மாநில மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ஜோதி ராதித்ய சிந்தே தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு இருந்த சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவை ரத்து செய்வதற்கு ஆகஸ்ட் 5-ம் தேதியே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். அந்த தகவலை, நேற்று மாநிலங்களவையில் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

மேலும், காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கும் அதனை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கும் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. பா.ஜ.கவின் செயல் ஜனநாயகப் படுகொலை என்று காங்கிரஸ் வர்ணித்துவருகிறது.


காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு அக்கட்சியிலிருந்தே எதிர்ப்பு கிளம்பிவருகிறது. காங்கிரஸின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் மாநிலங்களவைத் தலைவராக இருந்த புவனேஸ்வர் கலிட்டா எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதேபோல, காங்கிரஸின் மூத்த தலைவர்கள் ஜனார்த்தன் திரிவேதி, தீபிந்தர் ஹூடா ஆகியோர் பா.ஜ.கவை முடிவை வரவேற்றுள்ளனர்.


இந்தநிலையில், ராகுல் காந்தி மிகவும் நெருக்கமானவரும் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான ஜோதிராதித்ய சிந்தே பா.ஜ.கவின் செயலுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், ‘ஜம்மு காஷ்மீர் மாநிலப் பிரிவினை நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். இது, காஷ்மீரை முழுவதுமாக இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக்கும். அரசியல்சாசன நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால் இது இன்னமும் நன்றாக இருந்திருக்கும். வேறு ஏதும் கேள்விகள் எழுந்திருக்காது. எல்லாவற்றையும்தாண்டி, இது நம்முடைய தேசத்தின் விருப்பம். நான் இதை வரவேற்கிறேன்’என்று குறிப்பிட்டுள்ளார்.

Also see:
First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...