முன்பு இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது இல்லை! பா.ஜ.கவில் இணைந்த ஜோதிர்ராதித்ய சிந்தியா விமர்சனம்

அவருடைய ராஜினாமாவைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் 20 பேர் ராஜினாமா செய்தனர். அதனால், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

முன்பு இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது இல்லை! பா.ஜ.கவில் இணைந்த ஜோதிர்ராதித்ய சிந்தியா விமர்சனம்
ஜோதிர்ராதித்ய சிந்தியா
  • Share this:
முன்பு இருந்த காங்கிரஸ் கட்சி தற்போது இல்லை என்று பா.ஜ.கவில் இணைந்த ஜோதிர்ராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத்துக்கும் அக்கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவிவந்தது. அதன் உச்சகட்டமாக, நேற்று காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளிலிருந்து விலகுவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பினார்.

அவருடைய ராஜினாமாவைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் 20 பேர் ராஜினாமா செய்தனர். அதனால், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், இன்று பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் ஜோதிர்ராதித்ய சிந்தியா பா.ஜ.க இணைந்தார்.


பா.ஜ.கவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிர்ராதித்ய சிந்தியா, ‘காங்கிரஸ் கட்சியால் மக்களுக்கு செய்யவேண்டிய சேவையை முழுமையாக செய்ய முடியாது என்பதை நான் உறுதியுடன் கூறுவேன். அதேநேரத்தில் அந்தக் கட்சியின் தற்போதைய நிலைமை, அதுமுன்னாடி எப்படி இருந்ததோ அதேபோல தற்போது இல்லை என்பதைக் காட்டுகிறது.

என் வாழ்க்கையில் இரண்டு வாழ்க்கையை புரட்டிப்போடும் நிகழ்வுகள் உள்ளன. ஒன்று, எனது அப்பா உயிரிழந்த நிகழ்வு. இரண்டு நேற்று எனது வாழ்க்கைக்கான புதிய பாதையைத் நான் தேர்ந்தெடுத்தது. அவர்களுடைய குடும்பத்தில் என்னைச் சேர்த்துக் கொள்வதற்கு எனக்கு அழைப்புவிடுத்த பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா, நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.

Also see:
First published: March 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading