Home /News /national /

உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம்!

உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம்!

உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம்!

உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம்!

நீதிபதி உதய் உமேஷ் லலித்தின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா  ஏற்கனவே பரிந்துரைத்து இருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஆக.27ம் தேதியன்று தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

    இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி உதய் உமேஷ் லலித்தை நியமிப்பதற்கான அறிவிப்பை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வெளியிட்டார். தற்போது இந்திய தலைமை நீதிபதியாக உள்ள என்வி ரமணாவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 26ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

    இதனை தொடர்ந்து நீதிபதி உதய் உமேஷ் லலித், ஆகஸ்ட் 27-ல் இந்தியாவின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார். நீதிபதி உதய் உமேஷ் லலித்தின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா  ஏற்கனவே பரிந்துரைத்து இருந்தார்.

    நீதிபதி உதய் உமேஷ் லலித் நவம்பர் 8, 2022 அன்று 65 வயதில் ஓய்வு பெறுவதால் ஓய்வு பெறுவதற்கு முன் 74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chief justice of india, Supreme court

    அடுத்த செய்தி