அயோத்தி வழக்கிலிருந்து விலகிய நீதிபதி... பின்னணியும் காரணமும்...!

அயோத்தி வழக்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பு விசாரணையில் உள்ளது.

news18
Updated: January 10, 2019, 1:13 PM IST
அயோத்தி வழக்கிலிருந்து விலகிய நீதிபதி... பின்னணியும் காரணமும்...!
உச்ச நீதிமன்றம்
news18
Updated: January 10, 2019, 1:13 PM IST
அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரணை செய்யும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்விலிருந்து நீதிபதி யு.யு.லலித் விலகினார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள பாபர் மசூதி, ராமர் கோயிலை இடித்துவிட்டுதான் கட்டப்பட்டுள்ளது. எனவே, அங்கே ராமர் கோயில் கட்டவேண்டும் என்று பா.ஜ.க உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.

Ayodhya-Temple | அயோத்தி
அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதி


இதுதொடர்பான, வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாகப் பிரித்து பங்கு வைத்துக் கொள்ளவேண்டும் என்று தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து அனைத்து தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்தவழக்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பு விசாரணையில் உள்ளது.

இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ’இன்று எந்த விசாரணையும் கிடையாது. ஜனவரி 29-ம் தேதி முதல் விசாரணை தொடங்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதற்கிடையில், இஸ்லாமியர்கள் தரப்பில் நீதிபதி யு.யு.லலித், விசாரணை அமர்வில் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங்குக்கு ஆதரவாக வாதாடியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டது. அதனையடுத்து, நீதிபதி யு.யு.லலித் அயோத்தி வழக்கை விசாரிக்கும் அமர்விலிருந்து விடுவித்துக்கொண்டார்.

Also see:

First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...