மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்கிறார் ரஞ்சன் கோகாய்!

மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவியேற்க தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்கிறார் ரஞ்சன் கோகாய்!
நீதிபதி ரஞ்சன் கோகாய்
  • Share this:
மாநிலங்களவை உறுப்பினராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்கிறார்.

தலைமை நீதிபதி பதவியிலிருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஓய்வுபெற்ற கோகோயை, நியமன உறுப்பினராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் இன்று காலை 11 மணிக்கு நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவியேற்க உள்ளார்.

இதனிடையே, மாநிலங்களவை நியமன உறுப்பினராக ரஞ்சன் கோகாய் பதவியேற்க தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளர் மது பூர்ணிமா கிஷோர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், லோக்பால், யுபிஎஸ்சி, சிஏஜி உள்ளிட்ட அமைப்புகளில் ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு பதவிகள் வழங்குவது, நீதித்துறை சுதந்திரத்தை பாதிக்கும் எனக் கூறியுள்ளார்.


மேலும் இதுபோன்ற பதவிகளில் ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமனம் செய்ய உரிய வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டுமென மனுவில் அவர் கோரியுள்ளார்.

Also see...
First published: March 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading