ஹோம் /நியூஸ் /இந்தியா /

"ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டேன்”- மகிழ்ச்சியாக பதிவிட்ட இந்தியர்! - வைரலாகும் பதிவு..!

"ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டேன்”- மகிழ்ச்சியாக பதிவிட்ட இந்தியர்! - வைரலாகும் பதிவு..!

யாஷ் அகர்வால்

யாஷ் அகர்வால்

பதிவில் "#lovetwitter" மற்றும் "#lovewhereyouworked" என்ற ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார் .

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து தினம் தினம் ஒரு புதிய செய்தி, புதிய பரபரப்பு என்று இருந்து கொண்டே இருக்கிறது. அதன் ப்ளூ டிக் கணக்குகளுக்கான கட்டண உயர்வு, ஊழியர்கள் பணி நீக்கம் என்று நடந்துகொண்டே இருக்கிறது.

ட்விட்டர் இந்தியா அலுவலகத்தில் மார்க்கெட்டிங் மற்றும் கம்யூனிகேசன் துறைகளில் பணியாற்றியவர்கள் அனைவரையும் ட்விட்டர் நிறுவனம் பணி நீக்கம் செய்ய தொடங்கியுள்ள நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களில் 25 வயது இந்தியரான யாஷ் அகர்வால் எனும் ஒருவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

ஒரு வேலையை இழப்பது என்பது  வாழ்க்கையின் கடினமான நிகழ்வுகளில் ஒன்றாகும்.  அனைவரும் மிகுந்த வருத்தத்துடன் வெளிப்படுத்துவர். ஆனால் யாஷ் அதை வேறுவிதமாக விளக்கியதுதான் காரணம்.

இந்தியாவிலும் அதிரடியை தொடங்கிய எலான் மஸ்க்... ட்விட்டர் ஊழியர்கள் பணிநீக்கம்

LinkedIn இல், யாஷ் அகர்வால் ட்விட்டர் இந்தியா மற்றும் தெற்காசியாவில் ஒரு பொதுக் கொள்கை அசோசியேட்டாக தனது வேலைவாய்ப்பைப் பட்டியலிட்டார்.  இரண்டு ஆண்டுகளாக ட்விட்டர் இந்தியாவின் வெளிப்புற கூட்டாண்மை பணியை  மேற்கொண்டார். அவர் ட்விட்டேர் நிறுவனத்திக்காக  மாநில அரசுகள் மற்றும் யூனியன் அமைச்சகங்களுடனான அரசாங்க, சிவில் சமூகம்/என்ஜிஓக்களுடன் உறவுகளை கவனித்து வந்தார்.  தற்போது ட்விட்டர் அவரை பணியில் இருந்து நீக்கயுள்ளது.

பதவியில் நீக்கப்பட்ட பிறகு, யாஷ் தனது மகிழ்ச்சியான புகைப்படத்துடன் ட்விட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார்.  அவரது பதிவில் "#lovetwitter" மற்றும் "#lovewhereyouworked" என்ற ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார் .

“இப்போதுதான் பணிநீக்கம் செய்யப்பட்டேன். பறவை செயலியில் பணியாற்றியது பெருமைக்குரியது . ட்விட்டர் குழுவில், அதன் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தது மிகப்பெரிய பாக்கியம்” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

யாஷின் ட்வீட் தற்போது சமூக வலைதளத்தில் பிரபலமாகியுள்ளது. ட்விட்டரில், இந்த பதிவு, பல நபர்களிடமிருந்து நேர்மறையான கருத்துக்களைப் பெற்றுள்ளது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Elon Musk, Twitter