ஹோம் /நியூஸ் /இந்தியா /

அப்பாவிற்கு தர இருப்பது ஒரு சிறிய சதைப்பகுதியைதான்- லாலு மகளின் உருக்கமான ட்வீட்!

அப்பாவிற்கு தர இருப்பது ஒரு சிறிய சதைப்பகுதியைதான்- லாலு மகளின் உருக்கமான ட்வீட்!

லாலு- மகள் ரோகினி

லாலு- மகள் ரோகினி

நான் என் அப்பாவிற்கு தர இருப்பது என் உடம்பில் உள்ள ஒரு சிறிய சதைப்பகுதியை தான். அவருக்காக என்னால் எதையும் செய்ய முடியும். எல்லாம் நல்லபடியாக நடைபெற, தயவு செய்து இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

முன்னாள் பீஹார் முதல்வரும் , ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவிற்கு அவரது மகள் ரோகினி ஆச்சார்யாவின் சிறுநீரகம் மாற்றப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய உள்ளார். இது குறித்து ரோகினி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான  பதிவை வெளியிட்டுள்ளார்.

கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று ஜாமீனில் வெளிவந்துள்ள லாலு பிரசாத் தற்போது டெல்லியில் தனது மூத்த மகள் மிசா பார்தியின் வீட்டில் இருக்கிறார். 74 வயதான லல்லு, பல உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்டது.

கடந்த மாதம் அவர் தனது நீண்டகால சிறுநீரகப் பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற சிங்கப்பூருக்கு சென்றார். ஆனால் அக்டோபர் 24 ஆம் தேதி அவர் இந்தியாவிற்கு வெளியே தங்குவதற்கு டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடு முடிவதற்கு ஒரு நாள் முன்னதாக திரும்ப வேண்டியிருந்தது.

இதையும் படிங்க: இந்த ஊருக்குள்ள குழந்தை பிறக்கவே கூடாது.. பெண்கள் பிரசவிக்க தடை விதித்த கிராமம்.. 400 ஆண்டுகால நம்பிக்கை!

பின்னர் இங்கு அவருக்கு சிறுநீரக மாற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. குடும்ப உறுப்பினர்களின் மாதிரிகளை எடுத்து சோதித்த பின்னர் அவரது மகள் ரோஹிணியுடையது லல்லுவிற்கு ஒத்துப்போனது.

தற்போது சிங்கப்பூரில் வசித்து வரும் லாலு பிரசாத்தின் மகள் ரோகினி ஆச்சார்யா, நோய்வாய்ப்பட்ட தனது தந்தைக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்க முடிவு செய்த பின்னர், உணர்ச்சிகரமான ட்வீட் ஒன்றை வெளியிட்டார்.

அதில் "நான் என் அப்பாவிற்கு தர இருப்பது என் உடம்பில் உள்ள ஒரு சிறிய சதைப்பகுதியை தான். அவருக்காக என்னால் எதையும் செய்ய முடியும். எல்லாம் நல்லபடியாக நடைபெற, தயவு செய்து இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் குரல் கொடுக்க அப்பா மீண்டும் உடல்நிலை பெற்று வருவார்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

அரசியலில் இருந்து விலகியிருந்தாலும், சமூக ஊடகங்கள் வழி தனது குடும்பத்தின் சார்பாக தன் தந்தைக்கு அரவணைப்பை தரும் ஆச்சார்யா, அவரது குழந்தைப்பருவத்தில் கிளிக் செய்யப்பட்ட தனது தந்தையின் இரண்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அதோடு தனது தந்தையின் ரசிகர்களிடம் ட்விட்டரில் உரையாற்றி வருகிறார்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Delhi, Lalu prasad yadav, Tweet