• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • #BREAKING | சிதம்பரத்தின் நீதிமன்றக்காவல் அக்.3-ம் தேதி வரை நீட்டிப்பு - மீண்டும் திகார் சிறையில் அடைக்க உத்தரவு

#BREAKING | சிதம்பரத்தின் நீதிமன்றக்காவல் அக்.3-ம் தேதி வரை நீட்டிப்பு - மீண்டும் திகார் சிறையில் அடைக்க உத்தரவு

  • News18
  • Last Updated :
  • Share this:
    முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் வரும் அக்டோபர் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ.யால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இன்று காவல் முடிந்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிறை உணவால் அவரின் எடை குறைந்துவிட்டதாகக் கூறி, வீட்டு உணவு அளிக்க மனு அளிக்கப்பட்டது.

    காவலை நீட்டிக்கக் கோரி சிபிஐ தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை அடுத்து, சிதம்பரத்தை அக்டோபர் 3-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து, அவர் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: