ஹோம் /நியூஸ் /இந்தியா /

பிணை வழங்க நீதிபதிகள் அஞ்சுகிறார்கள்... உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பரபரப்பு கருத்து

பிணை வழங்க நீதிபதிகள் அஞ்சுகிறார்கள்... உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பரபரப்பு கருத்து

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்

நாம் குறி வைக்கப்படுவோமோ என பின் விளைவுகளுக்கு பயந்து நீதிபதிகள் பிணை தர மறுக்கிறார்கள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திசூட் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட டிஓய் சந்திரசூட்டிக்கு டெல்லியில் இந்திய பார் கவுன்சில் நடத்திய பாராட்டு விழா நடத்தியது. இந்த நிகழ்வில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மத்திய சட்ட அமைச்சர் கிரம் ரிஜிஜு ஆகியோர் பங்கேற்றார்.

  இந்த நிகழ்வில் தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது, "நீதித்துறையில் ஆணாதிக்க, சாதிய ரீதியான கட்டமைப்பு தொடர்ந்து வருகிறது. இது மாற வேண்டும். எனவே, மூத்த வழக்கறிஞர்கள் தங்கள் ஜூனியர்களை பன்முகப்பட்ட பின்புலத்திலிருந்து தேர்வு செய்ய வேண்டும். நீதித்துறையில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் விவாதம் எழுந்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளை ஒப்பிடும்போது நீதித்துறையில் தற்போது பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது.

  அதேவேளை பெண்கள் மட்டுமல்லாது ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சம வாய்ப்பை வழங்குவது நாம் உறுதி செய்ய வேண்டும். மேலும், நீதித்துறையின் மீதான நம்பிக்கையை நாம் காப்பாற்ற வேண்டும். குறிப்பாக மாவட்ட நீதிபதிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும். மாவட்ட நீதிபதிகள் உறுதியுடன் செயல்படாத காரணத்தால் உயர் நீதிமன்றங்களுக்கு அழுத்தம் அதிகரிக்கிறது. உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றத்தில் பிணை மனுக்கள் நிலுவையில் குவிந்துள்ளன. இதற்கு காரணம் கீழமை நீதிமன்றங்கள் பிணை வழங்க தயங்குவது தான்.

  இதையும் படிங்க: அரசு வாகனத்துடன் இன்ஸ்டாகிராமில் கெத்து போஸ்ட்... ஐஏஎஸ் அதிகாரி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை

  அவர்கள் குற்றத்தின் தன்மையை உணர்வதால், நாம் குறிவைக்கப்படுவோமோ என பின் விளைவுகளுக்கு பயந்து பிணை தர மறுக்கிறார்கள். இந்த பயத்தை குறித்து நாம் பேச மறுக்கிறோம்" என்றார். நீதிபதிகள் பிணை தர பயப்படுகிறார்கள் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறிய கருத்து கவனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்றுள்ளார். அவரின் பதிவிக் காலம் இரண்டு ஆண்டுகளாகும்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Bail, Bail rejected, Chief justice of india