Home /News /national /

''ராகுல் காந்திக்கு தகுதியில்லை'' - மூத்த காங்கிரஸ் நிர்வாகி P.J. குரியன் விமர்சனத்தால் சலசலப்பு...

''ராகுல் காந்திக்கு தகுதியில்லை'' - மூத்த காங்கிரஸ் நிர்வாகி P.J. குரியன் விமர்சனத்தால் சலசலப்பு...

ஜே.பி. குரியன் - ராகுல் காந்தி

ஜே.பி. குரியன் - ராகுல் காந்தி

Rahul Gandhi | கப்பல் தள்ளாடும்போது கேப்டனாக இருப்பவர் வெளியேறக் கூடாது. 2019-ல் காங்கிரஸ் நெருக்கடியான நிலையில் இருந்தபோது ராகுல் காந்தி தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார் - P.J. குரியன்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்பதற்கு ராகுல் காந்திக்கு போதிய தகுதியல்லை என்று மூத்த நிர்வாகியும், மாநிலங்களவை முன்னாள் துணை தலைவருமான P.J.குரியன் விமர்சித்துள்ளார்.

நடந்து முடிந்த பொதுத்தேர்தல், 5 மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வி என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அக்கட்சிக்கு தலைவர் பொறுப்பு காலியாக இருக்கும் நிலையில் தற்காலிக தலைவராக சோனியா காந்தி தொடர்ந்து வருகிறார்.

இந்தாண்டு இறுதியில் குஜராத் சட்டமன்ற தேர்தல், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கர்நாடக சட்டமன்ற தேர்தல், 2024-ல் பொதுத் தேர்தல் என காங்கிரஸ் கட்சிக்கு சவால்கள் காத்திருக்கின்றன.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகியும், மாநிலங்களவை முன்னாள் துணை தலைவருமான P.J.குரியன் கூறியதாவது-

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்பதற்கு ராகுல் காந்திக்கு போதிய தகுதியல்லை. காந்தி குடும்பத்திற்கு வெளியே இருந்து காங்கிரஸ் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

இதையும் படிங்க -  ''மோடியை ஆதரித்ததால் இளையராஜாவை அவமதிப்பதா?'' - பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம்

கப்பல் தள்ளாடும்போது கேப்டனாக இருப்பவர் வெளியேறக் கூடாது. 2019-ல் காங்கிரஸ் நெருக்கடியான நிலையில் இருந்தபோது ராகுல் காந்தி தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார். இருப்பினும் தற்போது வரை அவர்தான் பல விவகாரங்களுக்கு முடிவு எடுக்கிறார். அவர் மீது கட்சி நம்பிக்கை வைக்க முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். இருப்பினும் குரியனின் கருத்துக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க - லடாக் எல்லை அருகே 3 மொபைல் டவர்களை ஏற்படுத்திய சீனா... அதிர்ச்சி தகவல்

இதற்கிடையே, காங்கிரஸ் தலைமை நிர்வாகிகள் சோனியா காந்தி தலைமையில் நேற்று அவரது இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தின்போது தேர்தல் பிரசார வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றார்.

இதில் 2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.
Published by:Musthak
First published:

Tags: Rahul gandhi

அடுத்த செய்தி