முகப்பு /செய்தி /இந்தியா / Alt News முகமது ஜுபேர் கைதுக்கு எடிட்டர்ஸ் கில்ட் கண்டனம் 

Alt News முகமது ஜுபேர் கைதுக்கு எடிட்டர்ஸ் கில்ட் கண்டனம் 

முகமது ஜூபேர்

முகமது ஜூபேர்

Mohammed Zubair of Alt News Arrested : ஜுபைரின் கைதுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபேரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என எடிட்டர்ஸ் கில்ட் வலியுறுத்தியுள்ளது. ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஜுபைர் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரபல தகவல் சரிபார்க்கும் தளமான ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைரை டெல்லி போலீசார் திங்கள் கிழமை கைது செய்தனர். 2018 ஆம் ஆண்டு ஜுபைர் டிவிட்டரில் பதிவிட்ட கருத்துக்கள் இரு வேறு மதங்களை சேர்ந்தவர்களுக்கு இடையே பகைமையை உண்டாக்கியதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜுபைரின் கைதுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மீதும் சுபேர் மீதும் ஒரே பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் ஜுபைரை மட்டும் கைது செய்தது ஏன் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஜுபைரை உடனடியாக விடுவிக்க கோரியுள்ள எடிட்டர்ஸ் கில்ட், அவர் கைது செய்யப்பட்டுள்ளது மிகவும் கவலையளிப்பதாக கூறியுள்ளது.  கடந்த சில ஆண்டுகளாக ஜுபைர் மற்றும் அவரது இணையதளமான AltNews போலி செய்திகளை அடையாளம் கண்டு, தவறான தகவல் பிரச்சாரங்களை எதிர்கொள்வதில், முன்மாதிரியான பணிகளைச் செய்துள்ளதாக எடிட்டர்ஸ் கில்ட் கூறியுள்ளது.

நபிகள் நாயகம் குறித்து தொலைக்காட்சியில் நுபுர் சர்மா தவறானது கருத்துக்களை பதிவு செய்ததையும் ஜுபைர் முதல் முதலில் வெளி கொண்டுவந்தாக எடிட்டர்ஸ் கில்ட் தெரிவித்துள்ளது.

ஜி7 மாநாட்டின் போது பிரதமர் மோடி அளித்த உறுதியின் படி ஜுபைரை விடுவிக்க வேண்டும் என்ற அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்ற ஜி 7 மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பொது விவாதங்களை தொடங்கவும் சுதந்திரமான மற்றும் பன்மைத்துவ தன்மை வாய்ந்த ஊடகங்களை ஊக்குவிக்கவும் உறுதி எடுக்கப்பட்டது.

Also Read: சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் விரைவில் மும்பை பயணம்- ஏக்நாத் ஷிண்டே

இணைய ஊடக சங்கத்தினரும் ஜூபைரின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.“பாஜகவின் வெறுப்பு, மதவெறி மற்றும் பொய்களை அம்பலப்படுத்தும் ஒவ்வொருவரும் அவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உண்மையின் ஒரு குரலைக் கைது செய்வது இன்னும் ஆயிரம் குரல்களை உருவாக்கும் என கூறியுள்ளார்.

கொடுங்கோன்மையை வீழ்த்தி உண்மை எப்போதும் வெற்றி பெறும் என்றும் ராகுல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி சசிதரூர், திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட ஏராளமானோர் ஜுபைரின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். standwith zubir என்ற hashtag-கும் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

First published:

Tags: Delhi, Journalist, Maharashtra, RahulGandhi, Tweet