தொடர்ச்சியாக செய்தியாளர்கள் கைது: #emergencyinkarnataka ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்த நெட்டிசன்கள்!

முதல்வர் குமாரசாமி படத்தையும், நடிகை ராதிகா ஆகிய இருவர் படத்தை மார்ஃப் செய்து இணையத்தில் வெளியிட்டதாக குமாரசாமியின் ஊடகச் செயலாளர் தினேஷ் புகார் அளிதார். அந்தப் புகாரின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக செய்தியாளர்கள் கைது: #emergencyinkarnataka ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்த நெட்டிசன்கள்!
அஜித் ஷெட்டி ஹெரன்ஜி
  • News18
  • Last Updated: May 3, 2019, 8:19 PM IST
  • Share this:
கர்நாடாக மாநில முதல்வர் குமாரசாமி குறித்து போலிச் செய்தியை பரப்பியதாக செய்தியாளரும் பா.ஜ.க ஆதரவாளருமான அஜித் ஷெட்டி ஹெரன்ஜி கைது செய்யப்பட்டார். அதனையடுத்து, எமர்ஜென்சி இன் கர்நாடகா #emergencyinkarnataka என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகிவருகிறது.

கர்நாடகாவில் செயல்பட்டுவரும் யுகேசுத்தி( UKSuddi.in) என்ற செய்தி இணையதளத்தின் உரிமையாளர் கங்காதர் மற்றும் செய்தியாளரும் பா.ஜ.க ஆதரவாளருமான அஜித் ஷெட்டி ஹெரன்ஜி ஆகிய இருவரும் நேற்று இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஐ.பி.சி 468, 507, 509 ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த காவல்துறையினர், ‘முதல்வர் குமாரசாமி படத்தையும், நடிகை ராதிகா ஆகிய இருவர் படத்தை மார்ஃப் செய்து இணையத்தில் வெளியிட்டதாக குமாரசாமியின் ஊடகச் செயலாளர் தினேஷ் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்தனர்.


முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2017-ம் ஆண்டு கர்நாடக மாநில உள்துறை எம்.பி.பாடில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதம் என்று குறிப்பிட்டு கடித்ததை வெளியிட்டார் என்று செய்தியாளர் எஸ்.ஏ.ஹேமன்ந்த் குமார் கைது செய்யப்பட்டார்.

உள்துறை அமைச்சருக்கு எதிராக அவதூறாக பேசி இணையத்தில் வீடியோ வெளியிட்டதாக ஸ்ருதி பெல்லாகி என்பவர் ஏப்ரல் 27-ம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார். இந்தகைய தொடர் கைதுகளை பா.ஜ.க கண்டித்துவந்தது. இந்தநிலையில், கர்நாடகாவிலிருந்து எமர்ஜென்சி இன் கர்நாடகா(#emergencyinkarnataka) என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகிவருகிறது. இந்த ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்பவர்களில் பெரும்பாலான பெயர் சௌகிதார்( என்ற அடைமொழியுடன் உள்ளது.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: May 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading