புதுச்சேரியில் 2006ம் ஆண்டு முதல் "ஜாலிஹோம்ஸ்" என்ற பெயரில் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நகரில் நேரு வீதியில் விளம்பர அலுவலகம் நடத்தி வந்த புர்னே என்பவர் கடை வீதியில் ஊசி மணி விற்கும் நரிகுறவர்களின் குழந்தைகள் வீதியில் கிடப்பதை பார்த்து அவர்களுக்கு உதவினார். அவரது சேவைக்கு ராம் தங்கம் மாளிகை உரிமையாளர் ரமணிகாந்த் ஊக்கம் அளிக்கும் வகையில் வேன் ஒன்றை வழங்கினார். அதில் குழந்தைகளை ஜாலியாக ஏற்றி சென்றவர் ஜாலி ஹோம் என்ற பெயரில் தொண்டு நிறுவனமாக செயல்படுத்தி வருகிறார்.
8 குழந்தைகளுடன் துவங்கிய இந்நிறுவனத்தில் தற்போது நரிக்குறவர், ஆதரவற்றவர்கள் என 250 குழந்தைகள் உள்ளனர். புதுச்சேரியில் 2 காப்பகம் திருச்சியில் புள்ளம்பாடியில் ஒரு காப்பகம் உள்ளது. இங்குள்ள குழந்தைகளுக்கு படிப்பு, பாட்டு, நடனம், தொழில் பயிற்சி என அளிக்கப்படுகிறது. இவற்றை அளிக்கும் புர்னேவை அப்பா என்ற அழைக்கும் குழந்தைகள் தந்தையர் தினத்தையொட்டி வீடியோ ஒன்றை பரிசாக அவருக்கு அளித்துள்ளனர். ஒன்றரை வயதில் ஆதரவற்ற குழந்தையாக கண்டெடுக்கப்பட்ட அமலாவதி என்ற சிறுமிக்கு தற்போது 13 வயது. 8ஆம் வகுப்பு படிக்கிறாள்.
இதையும் படிங்க:
தெரு நாய் மீது கொடூர தாக்குதல்.. வெளியான சிசிடிவி காட்சிகள் - மின்வாரிய ஊழியர் மீது வழக்குப் பதிவு
அவரே இந்த பாடலை பாடியுள்ளார். பாடல் வரிகளை சிறுவர்களே எழுதி, இந்த காப்பகத்தில் உள்ள ஸ்டுடியோவிலேயே இவர்கள் எட்டிட் செய்துள்ளனர். "கைபுடிச்சி நான் நடக்க..என் சிரிப்ப நீ ரசிக்க..காசு பணம் தேவையில்லை..கால் கொலுசு தேவையில்லை..ஆலமரமாய் நீ இருக்க..."என துவங்கும் பாடல் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான "பால்புரஸ்கார்" விருதை இந்நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.