ஹோம் /நியூஸ் /இந்தியா /

''பாஜகவில் சேருங்கள் இல்லையென்றால் புல்டோசர் தான்'' அமைச்சர் சர்ச்சை பேச்சால் பரபரப்பு

''பாஜகவில் சேருங்கள் இல்லையென்றால் புல்டோசர் தான்'' அமைச்சர் சர்ச்சை பேச்சால் பரபரப்பு

மத்தியப் பிரதேச அமைச்சரின் சர்ச்சை பேச்சு

மத்தியப் பிரதேச அமைச்சரின் சர்ச்சை பேச்சு

மத்தியப் பிரதேச அமைச்சர் ஒருவர் பொதுவெளியில் பேசுகையில் பாஜக கட்சியில் சேர்ந்துவிடுங்கள் இல்லை என்றால் புல்டோசர் தயாராக இருக்கிறது என்று மிரட்டல் கருத்தை தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madhya Pradesh, India

மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்தாண்டு இறுதியில் அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு சில மாதங்கள் இருந்தாலும் கட்சிகள் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், தேர்தல் குறித்து ஆளும் பாஜக அமைச்சர் ஒருவர் பேசிய வீடியோ பொது வெளியில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அம்மாநிலத்தின் பஞ்சாயத்து அமைச்சரான மகேந்திர சிங் சிசோடியா அங்குள்ள குணா மாவட்டத்தில் ருதியாய் என்ற பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் அங்குள்ள காங்கிரஸ் கட்சி தொண்டர்களை மிரட்டும் தொனியில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் பேசுகையில்,"நீங்கள் அனைவரும் பாஜகவின் பக்கம் இணைந்துவிடுங்கள். 2023 சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக மீண்டும் ஆட்சியை அமைக்கும். மாமாவின் புல்டோசர் தயாராக இருக்கிறது. பார்த்துக்கொள்ளுங்கள்"என்றார். மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சவுஹானை தான் மாமா என்று அழைப்பது வழக்கம். எனவே, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். அரசு புல்டோசருடன் தயாராக இருக்கிறது என்ற அர்த்தத்தில் அவர் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம் : 15 வயது சிறுமியை நடுரோட்டில் சுட்டுக்கொன்ற இளைஞர்..!

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறது. சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். 2020இல் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியுடன் முரண்பட்டு பல எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்த போது அவருடன் மகேந்திர சிங்கும் பாஜகவில் சேர்ந்தார்.

First published:

Tags: Madhya pradesh, Minister, Viral Video