• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 12-17 வயதுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - ஜான்சன் அண்ட் ஜான்சன் விண்ணப்பம்

12-17 வயதுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - ஜான்சன் அண்ட் ஜான்சன் விண்ணப்பம்

கொரோனா தடுப்புசி

கொரோனா தடுப்புசி

அமெரிக்க மருந்து நிறுவனமான ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் ஒரே தவணை செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது.

  • Share this:
    இந்தியாவில் 12-17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான ஒரே தவணை தடுப்பூசி பரிசோதனைக்கு அனுமதி கோரி ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மத்திய மருந்து கட்டுப்பாட்டு தர நிர்ணய அமைப்பில் விண்ணப்பம் செய்துள்ளது.

    இந்தியாவில், கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜனவரி மாத்தில் இருந்து முன்கள மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன. பின்னர், கடந்த ஜூன் மாதம் முதல் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் கொரோனா தடுப்பூசிகளை போட்டு கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

    இந்நிலையில், இந்தியாவில் 12 முதல் 17 வயதுக்குட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரி ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

    அமெரிக்க மருந்து நிறுவனமான ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் ஒரே தவணை செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பூசிக்கு ஏற்கனவே அவசரகால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தற்போது 12 முதல் 17 வயதுக்கு உட்பட்டோருக்கு இந்த தடுப்பூசியை பரிசோதிக்க அனுமதி கோரி மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

    இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட தகவலின்படி, நாடு முழுவதும் 57.16 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 24 மணிநேரத்தில் 48,84,440 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதை அயடுத்து, மொத்தம் 57,16,71,264 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

    அதில், 18 முதல் 44 வயதுடையோருக்கு 26,66,831 பயனாளிகள் தங்களது முதல் தவணை தடுப்பூசியையும், 6,01,437 பயனாளிகள் தங்களது இரண்டாவது தவணை தடுப்பூசியையும் போட்டுக் கொண்டுள்ளதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Must Read : இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி விழிப்புணர்வு முன்னெடுப்பில் இணைகிறது உத்தர பிரதேச அரசு

    இந்தியாவில் தொடர்ந்து ஒரு வாரமாக கொரோனா தொற்று 40 ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரத்து 571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றுக்கு ஒரே நாளில் 540 பேர் உயிரிழந்ததால், மரணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 33 ஆயிரத்து 589 ஆக அதிகரித்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 63 ஆயிரத்து 605 ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 97. 54 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: