ஹோம் /நியூஸ் /இந்தியா /

அலுவலகத்திலேயே பாலியல் சீண்டல் - முன்னாள் தலைமைச் செயலாளர் மீது மேலும் ஒரு பெண் பரபரப்பு புகார்!

அலுவலகத்திலேயே பாலியல் சீண்டல் - முன்னாள் தலைமைச் செயலாளர் மீது மேலும் ஒரு பெண் பரபரப்பு புகார்!

காட்சிப்படம்

காட்சிப்படம்

21 வயது பெண் அந்தமானில் தலைமைச் செயலாளர் மேல் கூட்டுப் பாலியல் அத்துமீறல் புகார் அளித்திருந்த நிலையில் மீண்டும் ஒரு பெண் புகார் அளித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Andaman & Nicobar Islands, India

  தனது பதவி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரில் முன்னாள் தலைமைச் செயலாளர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார். தற்போது மீண்டும் ஒரு இளம் பெண் அவர் மேல் பாலியல் புகார் அளித்துள்ளார்.  தொடர்ந்து வரும் பாலியல் புகார் குறித்து அவரிடம் சிறப்பு விசாரணை குழு தீவிரமாக விசாரித்து வருகிறது.

  அந்தமான் நிக்கோபர் தீவுகளின் தலைமைச் செயலாளராக இருந்தவர் ஜிதேந்திரா நரேன். இவர் மீது 21 வயது இளம் பெண் ஒருவர் சமீபத்தில் பாலியல் புகார் அளித்தார்.  தனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இரண்டு முறை தலைமைச் செயலாளர் அரசு குடியிருப்பில் தன்னை தனியே அழைத்து அப்போது தலைமைச் செயலாளராக இருந்த ஜிதேந்திராவும், தொழிலாளர் ஆணையர் ஆர்.எல். ரிஷி ஆகியோர் தன்னை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்ததாக அந்த பெண் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

  இந்த புகாரை அடுத்துக் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் குற்றச்சாட்டுக்கு ஆளான ஜிதேந்திரவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த புகார் குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜிதேந்திரா நரேன், தனது பதவிக் காலத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்களை வேலை வாங்கித்தருவதாகக் கூறி தனது வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது.

  தற்போது அந்த புகாரின் தாக்கமே குறையாத நிலையில் அந்தமானில் மீண்டும் ஒரு பெண் அவர் மேல் பாலியல் புகார் அளித்துள்ளார். அவருடன் அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது பாலியல் துன்புறுத்தலில் ஈடுப்பட்டதாக புகார் அளித்துள்ளார். இந்த புகார் தற்போது விசாகா கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  ஜிதேந்திரா நரேனும், ரிஷியும் இணைந்து இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதற்கான செல்போன் உரையாடல் பதிவுகள், செல்போன் டவர் ஆதாரங்களைச் சிறப்புப் புலனாய்வுக் குழு திரட்டியுள்ளது. இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்ட நாளில் தலைமைச்செயலாளர் ஜிதேந்திர நரைன், டெல்லி நிதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டார். ஆனால் இந்த வழக்கால் அவர் 17 ஆம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

  Also Read : இலவச ஆன்லைன் டிக்கெட் எங்கு கிடைக்கும்? திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

  அவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதையடுத்து, ஜிதேந்திரா இடைக்கால ஜாமீன் கேட்டு டெல்லி ஜகோர்ட்டை நாடினார். அங்கு அக்டோபர் 28 ஆம் தேதி வரை அவரை கைது செய்யத் தடை விதிக்கப்பட்டது.

  இந்த நிலையில் அவர் மீண்டும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தை நாடினார். அதில் அவரை நவம்பர் 14 ஆம் தேதி வரை கைது செய்யாமல் இருக்கத் தடை விதித்துள்ளது. மேலும் இந்த வழக்கை சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது. அதன் படி சிறப்பு விசாரணைக் குழு அவரிடம் சுமார் 7 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தியுள்ளனர்.

  அந்தமான் பகுதியில் அவரை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மக்களுக்குப் பணி செய்ய வேண்டிய முக்கிய பதவியில் இருக்கும் தலைமைச் செயலாளரே வேலை வாங்கி தருவதாகக் கூறி 20 -க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் வன்கொடுமை செய்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Janvi
  First published:

  Tags: Jobs, Sexual abuse, Sexual harassment, Work Place