முகப்பு /செய்தி /இந்தியா / புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உள்ளூரிலேயே வேலை வழங்க திட்டம் - நிர்மலா சீதாராமன்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உள்ளூரிலேயே வேலை வழங்க திட்டம் - நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க 50 ஆயிரம் கோடி ரூபாயில் திட்டம் தொடங்கப்பட இருப்பதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வெளிமாநிலங்களில் வேலைபார்த்து வந்த தொழிலாளர்கள், கொரோனா தாக்கத்தால் வேலையிழந்து, சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடு முழுவதும் 116 மாவட்டங்களுக்கு அதிக அளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பி இருப்பதாக கூறினார்.

அவர்களுக்கு ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், தொழிலாளர்களின் திறன்களை கண்டறிந்து 25 வகையான பணிகளை வழங்க திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த திட்டத்தை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைக்க இருப்பதாகவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

மேலும் படிக்க...

4 வழிச்சாலை பாலத்தில் ஓட்டை: 100 நாட்களாகியும் சரிசெய்யாத தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம்..

இன்னும் 4 மாதங்களில் தொழிலாளர்களின் திறனை கண்டறிந்து, அவர்களது மாவட்டங்களிலேயே பல்வேறு தொழில்கள் தொடங்கப்படும். கிணறு தோண்டுதல், பண்ணை கட்டுமானம், சாலை போடுதல், பஞ்சாயத்துகளில் கட்டடம் கட்டும் வேலைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

First published:

Tags: Migrant workers, Minister Nirmala Seetharaman