ஜே.என்.யூ.வில் செக்யூரிட்டியாக இருந்து மாணவராக தேர்வானவரின் நெகிழ்ச்சிக் கதை!

பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் உதவியோடு பணி நேரம் போக மீதி நேரத்தில் நேரு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு தயாரானார் ராம்ஜல்.

news18
Updated: July 16, 2019, 6:37 PM IST
ஜே.என்.யூ.வில் செக்யூரிட்டியாக இருந்து மாணவராக தேர்வானவரின் நெகிழ்ச்சிக் கதை!
ராம்ஜல் மீனா
news18
Updated: July 16, 2019, 6:37 PM IST
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் செக்யூரிட்டியாக பணி செய்துவரும் ராஜஸ்தான் மாநிலச் சேர்ந்த ஒருவர் தற்போது அந்தப் பல்கலைக்கழத்திலேயே படிப்பதற்கு தேர்வாகியுள்ளார். 

ராஜஸ்தான் மாநிலத்தின் பஜேரா கிராமப் பகுதியைச் சேர்ந்தவர் ராம்ஜல் மீனா(34). பள்ளிப்படிப்பை தனது கிராமத்திலேயே முடித்தார். அதன்பிறகு, குடும்ப வறுமையின் காரணமாக கல்லூரிப் படிப்பைத் தொடரமுடியவில்லை.

கடந்த 2014-ம் ஆண்டு டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ராம்ஜல் தனியார் நிறுவனத்தின் கீழ் செக்யூரிட்டி பணியில் சேர்ந்தார். செக்யூரிட்டி பணியில் சேர்ந்தபிறகும், தனக்கு இருந்த படிப்பின் மீதான ஆர்வத்தினை ராம்ஜலால் விடமுடியவில்லை.

இதனால் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் உதவியோடு பணி நேரம் போக மீதி நேரத்தில் நேரு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு தயாரானார் ராம்ஜல்.

இந்த நுழைவுத்தேர்வில் ராம்ஜல் தற்போது தேர்ச்சிப் பெற்றுள்ளார். இதனையடுத்து ராம்ஜல் அந்தப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ ரஷ்ய பாடப்பிரிவை தேர்வு செய்து மாணவராக உள்ளே நுழைய உள்ளார்.

இந்நிலையில் ராம்ஜலுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். அவர் மட்டுமே சம்பாதித்து வருவதால் குடும்பத்தைப் பார்க்க வேறு யாரும் இல்லை. காலையில் மாணவராக பாடங்களை கற்றுக் கொண்டும், இரவில் வேலைப் பார்ப்பதற்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அனுமதிக் கேட்டுக் கொண்டுள்ளார். யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ்ஸாக வேண்டும் என்பதுதான் அவருடைய இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

Also see:

First published: July 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...