பாஜகவில் சேர்ந்த ஒரே வாரத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ!

பாஜக

2009 ஜூலை மாதம் லக்னோவில் உள்ள பகுகுனா ஜோஷியின் வீட்டிற்கு பகுஜன் சமாஜ் கட்சியினர் தீ வைத்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் முதல் குற்றவாளியே ஜிதேந்திர சிங் பப்லு தான்.

  • Share this:
பாஜகவில் கடந்த வாரம் புதிதாக இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரை சரியாக ஒரே வாரத்திற்குள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திர சிங் பப்லு. முன்னாள் எம்.எல்.ஏவான இவர் கடந்த வாரம் அதாவது ஆகஸ்ட் 4ம் தேதியன்று பாஜக மாநிலத் தலைவரான ஸ்வதந்திர தேவ் சிங் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைந்து கொண்டார்.

பாஜகவில் இணைந்து சரியாக ஒரு வாரம் ஆன நிலையில் நேற்று முன்னாள் எம்.எல்.ஏ ஜிதேந்திர சிங் பப்லுவை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது பாஜக தலைமை. இவர் பாஜகவில் இணைந்த போது கட்சிக்குள் பெரிய அளவில் சலசலப்புகள் ஏற்பட்டது.

Also Read: பேஸ்புக்கை ஆட்டம் காண வைத்த டிக் டாக் செயலி – உலகளவில் புதிய சாதனை!

கட்சியில் இருந்து நீக்க காரணம்?

பாஜகவில் இருந்து ஜிதேந்திர சிங் பப்லு நீக்கப்பட்டதற்கு அவர் மீதான கிரிமினல் பின்னணியே காரணமாக சொல்லப்படுகிறது. இவர் கலவர வழக்கு ஒன்றில் தொடர்புடையவர். பாஜகவில் இணைவதற்கு முன் இவர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தார். பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பிகாபுர் தொகுதியின் எம்.எல்.ஏவாக 2007-ல் வெற்றி பெற்றவர்.

Jitendra singh babloo


அந்த காலகட்டத்தில் முதலமைச்சராக இருந்த மாயாவதி குறித்து அப்போதைய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும், இப்போது பாஜகவின் அலகாபாத் எம்.பியாக இருப்பவருமான ரிதா பகுகுனா ஜோஷி பேசிய சில வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

Also Read:  பிரசாந்த் கிஷோர் பேச்சுவார்த்தை தோல்வி.. மம்தா பானர்ஜி கட்சியில் சேர முடியாது என மறுத்த அசாம் எம்.எல்.ஏ!

இதன் காரணமாக 2009 ஜூலை மாதம் லக்னோவில் உள்ள பகுகுனா ஜோஷியின் வீட்டிற்கு பகுஜன் சமாஜ் கட்சியினர் தீ வைத்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் முதல் குற்றவாளியே ஜிதேந்திர சிங் பப்லு தான். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் தான் இருந்து வருகிறது.

Bahuguna Joshi.


இதனையடுத்து கடந்த வாரம் ஜிதேந்திர சிங் பப்லு பாஜகவில் இணைந்த போது பெண் எம்.பியான பகுகுனா ஜோஷி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவர் கூறுகையில், லக்னோவில் என் வீடு தீவைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்தை முன்னின்று நடத்தியதே ஜிதேந்திர சிங் பப்லு தான். விசாரணையில் அவர் மீதான குற்றம் நிரூபனமானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விவரங்களும் ஜிதேந்திர சிங் மீதான குற்றப் பின்னணியும் நிச்சயம் மாநிலத் தலைமைக்கு தெரிந்திருக்காது அல்லது மறைக்கப்பட்டிருக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய மாநில பாஜக தலைமையிடம் நான் பேச இருப்பதாக கடந்த வாரம் ரிதா பகுகுனா ஜோஷி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் தற்போது ஜிதேந்திர சிங்கை நீக்கி பாஜக உத்தரவிட்டிருக்கிறது.
Published by:Arun
First published: