இந்தியாவில் மின்சார வாகனங்கள் இயக்கத்துக்கான தீர்வை உருவாக்குவது தொடர்பாக ஜியோ பி.பி நிறுவனத்தின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் பி.பி மொபிலிட்டி நிறுவனம் எம்.ஜி மோட்டார்ஸ் மற்றும் கேஸ்ட்ரோல் இந்தியா நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஜியோ பி.பி, எம்.ஜி மோட்டார்ஸ் மற்றும் கேஸ்ட்ரோல் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து மின்சார நான்கு சக்கர வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களின் கட்டமைப்பை தற்போது செயல்பாட்டில் இருக்கும் கேஸ்ட்ரோ சர்வீஸ் மையங்களில் உருவாக்கப்படவுள்ளது.
ஜியோ பிபி மற்றும் எம்.ஜி மோட்டார்ஸ் இடையேயான ஒபந்தம் மின்சார வாகன பயன்பாட்டாளர்களுக்கு தேவையான சார்ஜிங் மையங்களை போதுமான அளவில் வழங்குவதன் மூலம் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை இந்தியாவில் அதிகப்படுத்த வேண்டும் என்று மூன்று நிறுவனங்களும் சேர்ந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ பிபி நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு மின்சார வாகன சார்ஜிங் மையத்தை நிறுவியுள்ளது. ஜியோவின் மின்சார மொபிலிட்டி தொழில், இந்திய வாடிக்கையாளர்களுக்கு சார்ஜிங் மையங்களை வழங்குகிறது. ஜியோ பிபி மொபைல் ஆப்பின் மூலம், வாடிக்கையாளர்கள் எங்கே சார்ஜிங் மையங்கள் உள்ளன என்று தெரிந்துகொள்ளலாம்.
நிலையான எதிர்காலத்துக்காக மின்சார வாகனங்களை உருவாக்குவதற்கு எம்.ஜி மோட்டார்ஸ் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. மேலும், கேஸ்ட்ரோல் நிறுவனம் தங்களுடைய சர்விஸ் மையங்களில் மின்சார வாகன சார்ஜிங் மையங்களை அமைக்க உதவுகிறது.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.