ஹோம் /நியூஸ் /இந்தியா /

Jio 5G : புத்தாண்டில் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்... புதிதாக 11 நகரங்களில் 5G சேவை வழங்க திட்டம்

Jio 5G : புத்தாண்டில் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்... புதிதாக 11 நகரங்களில் 5G சேவை வழங்க திட்டம்

ஜியோ 5G

ஜியோ 5G

இந்த 11 நகரங்களும் சுற்றுலாதளத்திற்கும் கல்விக்கும் முக்கிய நகரங்களாக இருப்பதால் அளவில்லா வளர்ச்சியும் வாய்ப்புகளை உருவாக்கும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mumbai, India

ரிலையன்ஸ் ஜியோ தற்போது அதன் 5G சேவைகளை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 11 நகரங்களில் வழங்கும் என்ற மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. லக்னோ, திருவனந்தபுரம், மைசூரு, நாசிக், அவுரங்காபாத், சண்டிகர், மொஹாலி, பஞ்ச்குலா, ஜிராக்பூர், கரார் மற்றும் டெராபஸ்ஸி என்ற 11 நகரங்களில் ஜியோ தனது 5ஜி சேவைகளை வழங்குகிறது. இதில் லக்னோவை தவிர, மற்ற 10 நகரங்களிலும் 5G சேவைகளை வழங்கும் முதல் மற்றும் ஒரே நிறுவனமாக ஜியோ உருவாகியுள்ளது.

இந்த நகரங்களில் ஜியோ தனது பயனாளர்களுக்கு அவர்களது வரவேற்பு ஆஃபராக, 1 ஜிபிக்கும் அதிகமான வேகத்தில் கூடுதல் கட்டணமில்லாமல் இலவசமாக இணையதளத்தை வழங்குகிறது.

இதுகுறித்து, ஜியோ நிர்வாகி ஒருவர் கூறும்போது, “இந்த 11 நகரங்களில் நாங்கள் ஜியோ சேவையை தொடங்குவதன் மூலம், 5G சேவையை தொடங்கியதற்கு பிறகு நாங்கள் வெளியிடும் மிகப்பெரிய அறிவிப்பாக இது இருக்கிறது. இந்த நகரங்களில் இருக்கும் எங்களது (ஜியோ) பயனாளர்களுக்கு இலவச 5G சேவையை வழங்குவது மூலம் இந்த புதுவருடத்தில் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரும் மாற்றத்திற்கான நன்மையாக வழங்குகிறோம்.

இந்த நகரங்கள் அனைத்தும் சுற்றுலாதளத்திற்கும், மற்றும் கல்விக்கான முக்கிய நகரங்களாக இருக்கிறது. இந்த நகரங்களுக்கு 5G சேவைகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு சிறந்த தொலைதொடர்பு சேவையை வழங்குவது மட்டுமில்லாமல் அவர்களுக்கு கல்வி, ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு, ஆளுமை, விளையாட்டு, சுகாதாரம், விவசாயம்,

தகவல் தொழில்நுட்பம், சமூக ஊடக உருவாக்கம் போன்ற துறைகளில் அளவில்லா வளர்ச்சியும் வாய்ப்புகளை உருவாக்கும்.

நாட்டின் இந்த பகுதிகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு உதவிய சண்டிகர் நிர்வாகத்திற்கும், பஞ்சாப், ஹரியானா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, உத்தர பிரதேச மாநில அரசுகளுக்கும் எங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்” என தெரிவித்தார்.

First published:

Tags: 5G technology, Jio, Jio 5G, Jio Fiber, Telecommunications