2020-இல் 18 லட்சம் பேர் வேலையை இழப்பார்கள் - ஜிக்னேஷ் மேவானி

2020-இல் 18 லட்சம் பேர் வேலையை இழப்பார்கள் - ஜிக்னேஷ் மேவானி
ஜிக்னேஷ் மேவானி, வட்காம் தொகுதி எம்.எல்.ஏ. குஜராத்
  • Share this:
”பட்டதாரிகள் அனைவரும் ப்யூன் வேலைக்குதான் விண்ணப்பிக்கிறார்கள். வெளிவந்துள்ள ஒரு அறிக்கையின் அடிப்படையில் பார்த்தால், 2020-இல் 18 லட்சம் பேர் வேலையை இழப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார் குஜராத் வட்காம் தொகுதி எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி.

வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக் கூடிய எந்தத் திட்டமும் வகுக்கப்படவில்லை. பட்டதாரிகள் ப்யூன் வேலைகளுக்கு விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். 2020-இல் இன்னும் 18 லட்சம் பேர் வேலையை இழக்க இருக்கிறார்கள் என்பது ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்திருப்பதாக குஜராத் மாநிலம் வட்காம் தொகுதி எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.

2017-இல் ஜிக்னேஷ் மேவானி தேர்தலில் போட்டியிடுகிறார் எனத் தெரிந்தவுடன், காங்கிரசும் ஆம் ஆத்மியும் ’தங்களது கட்சிகள் போட்டியிடப்போவதில்லை’ என அறிவித்தன. டிசம்பரில் நடந்த குஜராத் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க.-வுடன் போட்டியிட்ட ஜிக்னேஷ், கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வட்காம் தொகுதியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.Also See...
First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading