• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கண்ணையா குமார் - யார் இவர்கள்?

காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கண்ணையா குமார் - யார் இவர்கள்?

jignesh mevani and kanhaiah kumar

jignesh mevani and kanhaiah kumar

கண்ணையா குமார், கடந்த 2016ம் ஆண்டு டெல்லி பாராளுமன்ற கட்டிட குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றிய பயங்கரவாதி அஃசல் குருவின் நினைவு நாளன்று தேச விரோத கோஷங்களை எழுப்பியதால் சிறை தண்டனை பெற்றவர்.

  • Share this:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் யூனியன் தலைவருமாக இருந்த கண்ணையா குமார், குஜராத் சுயேட்சை எம்.எல்.ஏவுமான ஜிக்னேஷ் மேவானி ஆகிய இரு இளம் தலைவர்வரும் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில தினங்களாகவே ஜிக்னேஷ் மேவானி, கண்ணையா குமார் ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வந்தது. இதனிடையே காங்கிரஸ் கட்சிக்குள் அவர்களை வரவேற்கும் விதமாக காங்கிரஸ் தலைமையகத்துக்கு எதிரே தற்போது போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா, சுஷ்மிதா தேவ், ஜிதின் பிரசாதா, பிரியங்கா சதுர்வேதி போன்ற இளம் தலைவர்கள் வெளியேறியிருக்கும் நிலையில், ஜிக்னேஷ் மற்றும் கண்ணையா குமார் ஆகிய இருவரின் வருகையும் காங்கிரஸ் கட்சிக்கு புதுத்தெம்பை அளிப்பதாக இருக்கும், குறிப்பாக ஜிக்னேஷ் மேவானியின் வருகை, குஜராத் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸுக்கு உத்வேகமாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கண்ணையா குமார்:

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் முறைப்படி சேர்ந்த கண்ணையா குமார், பீகாரில் தனது சொந்த தொகுதியான பெகுசாராயில், பாஜக வேட்பாளர் கிரிராஜ் சிங்கை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

Also Read:  வழிப்பறியில் ஈடுபட்டு வந்த முன்னாள் தேசிய சாம்பியன் கைது!

நாட்டின் பிரபலமான ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் யூனியன் தலைவராக இருந்த கண்ணையா குமார், கடந்த 2016ம் ஆண்டு டெல்லி பாராளுமன்ற கட்டிட குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றிய பயங்கரவாதி அஃசல் குருவின் நினைவு நாளன்று தேச விரோத கோஷங்களை எழுப்பியதால் சிறை தண்டனை பெற்றவர்.

சிபிஐ கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வரும் கண்ணையா குமார் பீகாரின் காங்கிரஸை பலப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:  ஜெர்மனியில் முதல்முறையாக 3 கட்சி இணைந்து ஆட்சி.. பதவி விலகும் ஏஞ்சலா மெர்கல்!

ஜிக்னேஷ் மேவானி:

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் வத்கம் எனும் தொகுதியின் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றிருப்பவர் ஜிக்னேஷ் மேவானி. தலித் செயற்பாட்டாளராக திகழும் ஜிக்னேஷ் மேவானி, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் குஜராத் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு பக்க பலமாக அமைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மாலை 3.30 மணியளவில் இருவரும் டெல்லியில் உள்ள காங்கிராஸ் தலைமையகத்திற்கு வந்து அதிகாரப்பூர்வமாக காங்கிரஸில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: