• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • முதல்வர் பதவியை விஜய் ரூபானி ராஜினாமா செய்தது இதற்குதான் - எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி விளக்கம்

முதல்வர் பதவியை விஜய் ரூபானி ராஜினாமா செய்தது இதற்குதான் - எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி விளக்கம்

ஜிக்னேஷ், விஜய் ரூபானி

ஜிக்னேஷ், விஜய் ரூபானி

விஜய் ரூபானி பதவி விலகல் முடிவு 2022-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை மனதில்வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்று எம்.எல்.ஏ விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    குஜராத் மாநிலத்தில் 1995ம் ஆண்டு முதல் ஒரு சில மாதங்கள் தவிர்த்து பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது. 2014ல் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் வரையில் குஜராத் மாநில முதல்வராக தொடர்ந்து 15 ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளார் மோடி.

    மோடிக்கு பிறகு ஆனந்தி பென் பட்டேல் குஜராத் முதல்வரானார், அவரைத் தொடர்ந்து முதல்வர் பதவிக்கு வந்தவர் விஜய் ரூபானி. 2022ம் ஆண்டு குஜராத் மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் முதல்வர் பதவியை திடீரென ராஜினாமா செய்திருக்கிறார் விஜய் ரூபானி.

    இன்று மதியம் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்திருக்கிறார் விஜய் ரூபானி. இவரின் பதவி விலகலுக்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படாததால் அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜய் ரூபானி, தன் மேல் நம்பிக்கை வைத்து முதல்வராக பணிபுரிய வாய்ப்பு கொடுத்த பாஜக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் முதல்வர் பதவி மாற்றம் என்பது பாஜகவுக்கு புதிதல்ல என்றும் கூறினார்.

    பாஜக மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ் தற்போது குஜராத்தில் முகாமிட்டிருப்பதால் விரைவில் புதிய முதல்வர் குறித்தான அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக இந்த ஆண்டில் கர்நாடகா மாநில முதல்வராக இருந்த எடியூரப்பா ராஜினாமா செய்துவிட்டு அவருக்கு பதிலாக பசவராஜ் பொம்மையும், உத்தரகாண்டில் திரத் சிங் ராவத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவருக்கு பதிலாக திரிவேந்திர சிங் ராவத் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முதல்வர் மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த ஒடுக்கப்பட்டவர்களுக்கான செயற்பாட்டாளரும், சுயேட்சை எம்.எல்.ஏவுமான ஜிக்னேஷ் மேவானி, ‘கொரோனா பாதிப்புகளை மிகவும் தவறாக கையாண்ட விஜய் ரூபானி பதவி விலகியதற்கு குஜராத் மக்கள் அவரைப் பாராட்ட வேண்டும். அவருடைய ராஜினாமா 2022-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் முடிவு’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: