உறவுக்கார குழந்தையை நாசம் செய்ய முயன்ற தந்தையை கையும் களவுமாக பிடித்த மகள்!

news18
Updated: August 11, 2019, 2:52 PM IST
உறவுக்கார குழந்தையை நாசம் செய்ய முயன்ற தந்தையை கையும் களவுமாக பிடித்த மகள்!
பாலியல் வன்கொடுமை
news18
Updated: August 11, 2019, 2:52 PM IST
உறவுக்கார 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தந்தையை கையும் களவுமாக பிடித்து அவரின் மகள் போலீசில் ஒப்படைத்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் ஜம்ஷெட்பூர் அருகே உள்ள பிர்ஸா பாஸ்தி என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. போத்ரா என்ற நபர் உறவுக்கார 4 வயது குழந்தையை சாக்லெட் கொடுத்து அழைத்துச் சென்று தனது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதனைப் பார்த்த, போத்ராவின் 15 வயது மகள் கதவைப் பூட்டிவைத்து அக்கம்பக்கத்தினரை கூக்குரலிட்டு அழைத்துள்ளார். மேலும், போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளார். அருகில் உள்ளவர்கள் வீட்டின் கதவைத்திறந்து குழந்தையை மீட்டனர். மேலும், போத்ராவை அடித்து உதைத்தனர்.

அங்கு விரைந்து வந்த போலீசார் போத்ராவை கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும், பாதிக்கப்பட்ட குழந்தையை மருத்துவ சோதனைக்கு உள்படுத்தியுள்ளனர். இதற்கு முன்னர் ஏற்கனவே, அங்குள்ள பெண் ஒருவரிடம் போத்ரா முறைதவறி நடக்க முயன்று அங்குள்ளவர்களால் தாக்கப்பட்டுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

First published: August 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...