ஜார்கண்ட் மாநிலத்தில் 12ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜார்காண்ட் மாநிலத்தில் உள்ள தும்கா பகுதியில் வசிக்கும் 12ஆம் வகுப்பு மாணவியை அப்பகுதியைச் சேர்ந்த ஷாருக் என்ற இளைஞர் கடந்த சில நாள்களாக பின்தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.
10 நாள்களுக்கு முன்பு இந்த பெண்ணை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட ஷாருக் தன்னிடம் நண்பராகி பேச வேண்டும் என்றும் இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன மாணவி இதை தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தான் அந்த இளைஞரின் குடும்பத்திடம் பேசி பிரச்சனையை தீர்த்து வைக்கிறேன் என்றுள்ளார். இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை இரவு உணவருந்தி விட்டு தனது அறையில் மாணவி படுக்கச் சென்றுள்ளார்.
அதிகாலை வேளையில் மாணவியின் உடலில் எரிச்சல், நெருப்பு வாசனை காணப்படவே விழித்துப் பார்க்கையில் ஷாருக் தன் மீது பெட்ரோல் உற்றி தீவைத்ததை கண்டு திடுக்கிட்டார். ஷாருக் ஜன்னல் வழியாக பெட்ரோல் உற்றி தீவைத்த நிலையில், மாணவி கூச்சலிட்டு கதறியுள்ளார். பெற்றோர் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 90 சதவீத தீக்காயங்களுடன் மாணவி தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பாக மாணவி வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், இளைஞர் ஷாருக்கும் அவருக்கு பெட்ரோல் வாங்கி தந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நொய்டா கட்டடம் இடிப்பு.. ரூ.500 கோடி நஷ்டம்..! கட்டட ஓனர் புலம்பல்
மாணவியின் மரணம் தொடர்பாக அங்கு போராட்டம் வெடித்துள்ள நிலையில், தும்கா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விரைவு நீதிமன்றம் மூலம் நீதி பெற்றுத்தரப்படும் மாநில அமைச்சர் பன்னா குப்தாவும், தும்கா எஸ்பி அம்பர் லக்டாவும் உறுதியளித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Girl Murder, Jharkhand