Home /News /national /

ஜார்க்கண்ட் அரசுக்கு நெருக்கடி?.. குதிரை பேரத்தை தவிர்க்க எம்.எல்.ஏக்களை சொகுசு விடுதியில் தங்க வைக்க திட்டம்

ஜார்க்கண்ட் அரசுக்கு நெருக்கடி?.. குதிரை பேரத்தை தவிர்க்க எம்.எல்.ஏக்களை சொகுசு விடுதியில் தங்க வைக்க திட்டம்

ஜார்க்கண்ட் எம்.எல்.ஏக்கள்

ஜார்க்கண்ட் எம்.எல்.ஏக்கள்

Jharkhand Political Crisis : மேற்குவங்கம் அல்லது சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Jharkhand, India
    ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ பதவியை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ள நிலையில், ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்.எல்.ஏக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

    ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கடந்த ஆண்டு தனது பெயரில் சுரங்க ஒதுக்கீடு பெற்றார். அவர் தனது பதவியை பயன்படுத்தி சட்டவிரோதமாக சுரங்க உரிமத்தைப் பெற்றதாகக் கூறி தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்தது. அதனடிப்படையில் விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ பதவியை தகுதிநீக்கம் செய்யும்படி மாநில ஆளுநருக்கு பரிந்துரைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

    அதனடிப்படையில் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவி தகுதி நீக்க உத்தரவை ஆளுநர் தேர்தல் ஆணையத்திற்கு இன்று அனுப்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் இல்லத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்.எல்.ஏக்கள் அவசர ஆலோசனை மேற்கொண்டனர்.

    Also Read: அடுத்த தலைவர் யார்..? - காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது

    அதன்பிறகு அனைத்து எம்.எல்.ஏக்களும் ராஞ்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குந்தி பகுதிக்கு இரண்டு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர். முதலமைச்சர் ஹேமந்த் சோரனும் எம்.எல்.ஏக்களுடன் பயணம் மேற்கொண்டார். குதிரை பேரத்தை தடுப்பதற்காக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் மேற்குவங்கம் அல்லது சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Hemant Soren, Jharkhand, Political

    அடுத்த செய்தி