கொரோனா பாதித்தவருக்காக 1,300 கிமீ பயணித்து ஆக்ஸிஜன் சிலிண்டர் கொண்டு வந்து உதவிய நண்பர்!

ஆக்ஸிஜன் சிலிண்டர் கொண்டு வந்து உதவிய நண்பர்!

ராஜன் மற்றும் தேவேந்திர குமார் ஆகிய இருவருக்கும் நண்பரான சஞ்சீவ் சுமன் என்பவர் கடந்த ஏப்ரல் 19ம் தேதி கொரோனாவால் உயிரிழந்தது தேவேந்திர குமாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

 • Share this:
  கொரோனாவால் பாதித்து ஆக்ஸிஜன் ஆதரவுடன் சிகிச்சை பெற்று வந்த நண்பருக்காக 1,300 கிமீ பயணம் செய்து வந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை தந்து நட்புக்கே எடுத்துக்காட்டாக மாறியிருக்கிறார் அவரின் நண்பர் ஒருவர்.

  கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தியாவில் கொரோனா 2வது அலை மிக வீரியத்துடன் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் திண்டாட்டத்தை சந்தித்து வருகின்றனர். நாட்டில் பல மாநிலங்களிலும் இது தான் யதார்த்தம் என்றாகிவிட்டது. அதே போல மருத்துவ சிகிச்சைக்கு தேவையான ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் போன்றவற்றிற்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக நாட்டில் மருத்துவ ஆக்ஸிஜன் கிடைப்பது திண்டாட்டமாகி வருகிறது. இதன் காரணமாக பல தன்னார்வலர்கள் ஆக்ஸிஜன் கிடைப்பதற்கு தங்களால் இயன்ற உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  இந்த சூழலில் ஜார்க்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தனது நண்பருக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என அறிந்து உடனடியாக களத்தில் இறங்கி 1,300 கிமீ பயணம் செய்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தனது நண்பருக்கு ஆக்ஸிஜன் சிலிண்டரை கொண்டு சேர்த்துள்ளார்.

  ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த தேவேந்திர குமார் ஷர்மாவுக்கு கடந்த ஏப்ரல் 24ம் தேதி தனது நண்பரான சஞ்சய் சக்சேனாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அப்போது அவர்களின் பொது நண்பரான ராஜன் என்பவருக்கு கொரோனா பாதித்திருப்பதாகவும் அவருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். டெல்லிக்கு அருகாமையில் உள்ள காசியாபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ராஜன் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவருடைய ஆக்ஸிஜன் இருப்பானது 24மணி நேரம் மட்டுமே தாங்கும் எனவும் டெல்லி பகுதியில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுவதால் ஆக்ஸிஜன் கிடைக்காமல் போராடுவதாகவும் சஞ்சய் சக்சேனா, தேவேந்திர குமார் ஷர்மாவிடம் தெரிவித்தார்.

  உடனடியாக தன்னுடைய மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு ராஞ்சியில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள பொகாரோவுக்கு சென்று, ஜார்க்கண்ட் கேஸ் தொழிற்சாலை வைத்துள்ள ராகேஷ் குமார் குப்தாவை சந்தித்து நிலைமையை எடுத்துக் கூறி ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரை பெற்றிருக்கிறார். ராகேஷும், தேவேந்திர குமாரின் உதவும் மனப்பான்மை அறிந்து கொண்டு ஆக்ஸிஜன் சிலிண்டருக்கு பணம் வாங்காமல் இலவசமாகவே கொடுத்து வழியனுப்பி வைத்துள்ளார்.
  கொரோனா அவலம்: மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் கொரோனா பாதித்த ஒன்றரை வயது குழந்தை மரணம்!

  உடனடியாக ஆக்ஸிஜன் சிலிண்டரை பெற்றுக் கொண்ட தேவேந்திர குமார், நண்பர் ஒருவரிடமிருந்து காரை இரவலாக பெற்றுக்கொண்டு 1300 கிமீருக்கு மேல் பயணித்து 24 மணி நேரத்திற்குள் காசியாபாத்தை குறித்த நேரத்திற்கு அடைந்து நண்பர் ராஜனுக்கு உதவியிருக்கிறார்.

  ராஜன் மற்றும் தேவேந்திர குமார் ஆகிய இருவருக்கும் நண்பரான சஞ்சீவ் சுமன் என்பவர் கடந்த ஏப்ரல் 19ம் தேதி கொரோனாவால் உயிரிழந்தது தேவேந்திர குமாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கொரோனாவுக்கு மேலும் ஒரு நண்பரை இழக்க மனமில்லாமல் களத்தில் சுறுசுறுப்புடன் சுழன்று நண்பருக்கு உதவி அவரின் உயிரையும் காப்பாற்றியிருக்கும் தேவேந்திர குமாரை நண்பர்கள் பலரும் பாராட்டினர்.
  Published by:Arun
  First published: