ஹோம் /நியூஸ் /இந்தியா /

2வது மனைவியை 18 துண்டுகளாக வெட்டி நாய்களுக்கு உணவாக்கிய கொடூர கணவன் : அடுத்த பகீர்!

2வது மனைவியை 18 துண்டுகளாக வெட்டி நாய்களுக்கு உணவாக்கிய கொடூர கணவன் : அடுத்த பகீர்!

கைது செய்யப்பட்ட கணவர் அன்சாரி

கைது செய்யப்பட்ட கணவர் அன்சாரி

22 வயது பழங்குடியினப் பெண் கணவரால் பல துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஜார்கண்டில் அரங்கேறியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Jharkhand, India

டெல்லி ஷ்ரத்தா வால்கர் என்ற பெண்ணின் கொலையை தொடர்ந்து நாட்டில் அதே பாணியில் பல கொலை சம்பவங்கள் தொடர்ந்து அம்பலமாகி வருகின்றன. அப்படி ஒரு கொடூர சம்பவம் ஒன்று ஜார்க்கண்ட் மாநிலத்திலும் அரங்கேறியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாஹிப்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 22 வயது பழங்குடி இன பெண் ரூபிக்கா என்பவருக்கும் அங்கு வசிக்கும் தில்தார் அன்சாரி என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அன்சாரிக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், இந்த பெண் ரூபிகாவை 10-15 நாள்களுக்கு முன்னர் தான் இரண்டாவது திருமணம் செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், ரூபிகா கடந்த சில நாள்களாக மாயமான நிலையில், ரூபிகாவின் பெற்றோர் பெண்ணை காணவில்லை என காவல்துறையினர் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து பெண்ணின் வீட்டருகே நாய்கள் எலும்புகளை கடித்து உண்டு கொண்டுதிருந்ததை அப்பகுதியினர் சந்தேகத்துடன் பார்த்துள்ளனர்.

இதையும் படிங்க: சிறுமியை வீட்டிற்கு அழைத்து மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை... தாய், மகன் கைது

அந்த எலும்புகள் மனித எலும்புகள் போல இருந்த நிலையில், உள்ளூர்வாசிகள் காவல்துறையிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் எலும்புகளை மீட்டெடுத்தனர்.

சந்தேகமடைந்த காவல்துறையினர் அன்சாரியின் வீட்டிற்கு சென்று சோதனை செய்ததில் அங்கு பல துண்டுகளாக வெட்டி சிதைக்கப்பட்ட ரூபிகாவின் உடலை கண்டெடுத்தனர்.  பழங்குடியின பெண் ரூபிகாவை அன்சாரி கொலை செய்ததும் அவர் மனைவியை கொன்று 18 துண்டுகளாக வெட்டு சிதைத்ததும்  விசாரணையில் அம்பலமான நிலையில், அவரை கைது செய்து காவல்துறை சிறையில் அடைத்தது. மேலும், ரூபிகாவின் தொலைந்து போன உடல் பாகங்களை மோப்ப நாயின் உதவியுடன் காவல்துறை தேடி வருகிறது.

First published:

Tags: Crime News, Jharkhand, Murder