முகப்பு /செய்தி /இந்தியா / மனைவியை கொலை செய்து நண்பரின் வீட்டில் புதைத்து நாடகம் - கணவனை கைது போலீஸ் விசாரணை

மனைவியை கொலை செய்து நண்பரின் வீட்டில் புதைத்து நாடகம் - கணவனை கைது போலீஸ் விசாரணை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தனது மனைவியை கொன்று புதைத்துவிட்டு போலீசாரிடம் காணவில்லை என்று புகார் அளித்து நாடகமாடிய கணவரை ஜார்கண்ட் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Jharkhand, India

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரிதிஹ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனிஷ் பரன்வால். இவருக்கு அர்ஜுமன் பானோ என்ற பெண்ணுடன் திருமணான நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு மற்றும் சண்டை ஏற்பட்டுள்ளது. மனைவி வேறு நபர்களிடம் நீண்ட நேரம் போனில் பேசுவது கணவர் மனிஷ்சுக்கு பிடிக்கவில்லை. எனவே, மனைவியை கொல்லை சதித்திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி 2021ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியே அழைத்து செல்லுவது போல் கூட்டிச் சென்று கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் தனது நண்பர் ஒருவரின் வீட்டில் உடலை புதைத்துவிட்டு ஏதும் நடக்காதது போல இருந்துள்ளார். பின்னர் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக சில நாள்கள் கழித்து மனைவியை காணவில்லை தேடித் தாருங்கள் என போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இருப்பினும் உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் உறவினர் தரப்புக்கு கணவர் மனிஷ் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதை காவல்துறையிடம் வெளிப்படுத்திய நிலையில் இதே கோணத்தில் போலீசார் விசாரிக்கத் தொடங்கினர். இந்த நிலையில், சுமார் ஓராண்டு கழித்து மனிஷ் தான் மனைவியை கொன்றார் என்பது அம்பலமானது.

மனிஷை கைது செய்த காவல்துறை, நண்பரின் வீட்டில் இருந்து புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் எலும்புகள் மீட்கப்பட்டு டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. கணவர் மனிஷ்சுக்கு உதவிய நண்பர் தலைமறைவான நிலையில் அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

First published:

Tags: Crime News, Jharkhand, Murder