Home /News /national /

இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு வந்த ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஐஏஎஸ் அதிகாரி கைது

இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு வந்த ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஐஏஎஸ் அதிகாரி கைது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விருந்தின் போது ஐஏஎஸ் அதிகாரி சயித் ரியாஸ் ஒரு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    ஜார்கண்டில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தன்னிடம் பயிற்சிக்கு வந்த ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    ஜார்கண்ட் மாநிலத்தின் குந்தி பகுதியில் சப் டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட்டாக பணிபுரிந்து வருபவர் ரியாஸ் அகமது. ஐஏஎஸ் அதிகாரியான இவரிடம் இன்டர்ஷிப் செய்வதற்காக வேற்று மாநிலத்தைச் சேர்ந்த ஐஐடி கல்வி நிறுவனத்தில் படிக்கும் எட்டு மாணவிகள் வந்துள்ளனர்.

    பயிற்சிக்கு வந்த மாணவிகள் அங்குள்ள அரசு விடுதியில் தங்கியிருந்த நிலையில் அவர்களுக்கு அரசு அதிகாரிகள் தரப்பில் இரவு விருந்து அளிக்கப்பட்டுள்ளது. இந்த விருந்தின் போது ஐஏஎஸ் அதிகாரி சயித் ரியாஸ் ஒரு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி, சக மாணவிகளுடன் காவல்துறையினரிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில், மாணவிகள் அளித்த புகாருக்கு முகாந்திரம் இருந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து ரியாஸ் அகமது கைது செய்யப்பட்டு அவரை இரு வார நீதிமன்ற காவலில் காவல்துறையினர் வைத்துள்ளனர்.இவர் மீது இபிகோ 354, 354ஏ, 509ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: வேலை செய்யாமல் சம்பளம் வாங்க மனம் உறுத்துகிறது - ரூ.24 லட்சத்தை திரும்பி தந்த பேராசிரியர்

    மேலும், இந்த விவகாரத்தில் ஜார்கண்ட் மாநில அரசும் தலையிட்டுள்ளது. புகாருக்கு ஆளாகி கைதாகியுள்ள ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரேன் சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொண்டு உத்தரவிட்டுள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Jharkhand, Sexual abuse, Sexual harassment

    அடுத்த செய்தி