ஹோம் /நியூஸ் /இந்தியா /

மனைவியை 50 துண்டுகளாக வெட்டி ஆங்காங்கே வீசிய கணவன்.. டெல்லியை மிஞ்சிய ஷாக் சம்பவம்!

மனைவியை 50 துண்டுகளாக வெட்டி ஆங்காங்கே வீசிய கணவன்.. டெல்லியை மிஞ்சிய ஷாக் சம்பவம்!

ஜார்க்கண்ட் கொலை

ஜார்க்கண்ட் கொலை

Jharkhand Murder | 18 உடல் பாகங்களை கண்டறிந்த போலீசார், மீதி உடல் பாகங்களை திவீரமாக தேடி வருகின்றனர்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Jharkhand, India

ஜார்க்கண்டில் மனைவியை 50 துண்டுகளாக வெட்டி வீசிய கணவரின் கொடூர செயல் நடுநடுங்க செய்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் ஷ்ரத்தா என்ற பெண் தன் காதலனால் 35 துண்டுகளாக வெட்டப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தின் வடுவே இன்னும் ஆறாத நிலையில், தற்போது இதே போன்று ஜார்க்கண்டிலும் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாஹிப்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 22 வயது பழங்குடி இன பெண் ரூபிக்கா என்பவருக்கும் அங்கு வசிக்கும் தில்தார் அன்சாரி என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்னர் தான் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அன்சாரிக்கு ரூபிக்கா 2வது மனைவி ஆவார். இருவரும் திருமணம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்த நிலையில், கடந்த2 நாட்களாக மனைவியை காணவில்லை என அன்சாரி போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதே போன்று ரூபிக்காவின் பெற்றோரும் மகளை காணவில்லை என்றும், அன்சாரி மீது சந்தேகம் இருப்பதாகவும் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் அன்சாரி மீது சந்தேக பார்வையை பதித்த படி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், அப்பகுதியில், சில நாய்கள் எலும்பு கூடுகளை கடித்து உண்டு கொண்டிருப்பதை பார்த்த மக்கள், அது மனித எலும்பு கூடு என்பதை கண்டறிந்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும், அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்திலும் சில எலும்புகள் கிடப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க | திருநங்கையை லாரியில் கடத்தி சென்று கொலை செய்த கொடூரம்..! வாக்குமூலத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், எலும்பு துண்டுகளை மீட்டு சோதனை செய்ததில் அது ரூபிக்காவின் எலும்பு கூடுகள் என்பதை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து, அன்சாரியை பிடித்து விசாரணை செய்ததில், உண்மையை கக்க தொடங்கினார்.

இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தன் மனைவியை கொலை செய்து கூர்மையான ஆயுதத்தால் 50க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி ஆங்காங்கே வீசியதாகவும், சந்தேகம் வர கூடாது என்பதற்காக போலீசாரிடம் மனைவியை காணவில்லை என புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து அன்சாரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரூபிக்காவின் உடல் பாகங்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Jharkhand, Murder