Home /News /national /

கணவருக்கு ரத்தம் கிடைக்காமல் தவித்த மனைவி.. ரத்த தானம் கொடுத்து உதவிய அமைச்சர்

கணவருக்கு ரத்தம் கிடைக்காமல் தவித்த மனைவி.. ரத்த தானம் கொடுத்து உதவிய அமைச்சர்

ஜார்கண்ட் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா

ஜார்கண்ட் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா

பெண்ணின் கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர் பன்னா, அந்நபரின் ரத்தப் பிரிவும் தனது ரத்தப் பிரிவும் ஒன்றாக இருப்பதை அறிந்து கொண்டார். உடனடியாக களத்தில் இறங்கி தானே அந்த நபருக்கு ரத்ததானம் செய்துள்ளார்.

    ஜார்கண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அங்குள்ள மருத்துவமனைக்கு ஆய்வு செய்த போது, நோயாளி ஒருவருக்கு உதவும் விதமாக ரத்த தானம் செய்துள்ளார்.

    ஜார்கண்ட் மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சராக இருப்பவர் பன்னா குப்தா. இவர் அம்மாநிலத்தின் ஜாம்ஷெத்பூர் பகுதியில் உள்ள எம்ஜிஎம் என்ற அரசு மருத்துவமனையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அம்மருத்துவமனையில் எக்ஸ் ரே, அல்ட்ராசவுன்ட் மற்றும் சிடி ஸ்கேன் ஆகிய புதிய உபகரணங்களை செயல்பாட்டிற்காக தொடங்கிவைத்தார். மருத்துவமனையின் ஆய்வின் போது, அம்மாவட்டத்தின் கலிகாபூர் என்ற பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அமைச்சரிடம் நேரடியாக வந்து முறையீடு ஒன்றை வைத்தார்.

    தனது 49 வயது கணவர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு அவசரமாக ரத்தம் தேவைப்படுகிறது என்றார். நீண்ட நேரம் முயற்சி செய்தும் தனது கணவருக்கு ரத்தம் கிடைக்கவில்லை என்பதால் எப்படியாவது ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என அமைச்சர் பன்னாவிடம் முறையிட்டுள்ளார்.


    அந்த பெண்ணின் கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர் பன்னா, அந்நபரின் ரத்தப் பிரிவும் தனது ரத்தப் பிரிவும் ஒன்றாக இருப்பதை அறிந்து கொண்டார். உடனடியாக களத்தில் இறங்கி தானே அந்த நபருக்கு ரத்ததானம் செய்துள்ளார்.

    இதையும் படிங்க: ரூ.40 கட்டணத்தில் உள்ளூர் ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை எடுக்கும் கேப்டன் தோனி

    அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நான் முதலில் மனிதன். ஒரு தங்கையின் கணவரை காப்பாற்ற நான் செய்ய வேண்டிய கடமையைத் தான் செய்தேன்' என்றார். கடந்த மார்ச் மாதத்தில் இதே அமைச்சர் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, சாலையில் மூன்று இளைஞர்கள் அடிபட்டு இருந்ததை கண்டுள்ளார். உடனடியாக, சாலையில் இறங்கி ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்த அவர், மூன்று இளைஞர்களையும் மருத்துவமனையில் அனுமதித்த பின்னரே தனது பணிக்கு திரும்பினார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Blood Donation, Jharkhand, Minister

    அடுத்த செய்தி