ஜார்கண்ட் ஹாக்கி வீராங்கனைகளுக்கு ரூ.50 லட்சம் பரிசு - ஹேமந்த் சோரன் அறிவிப்பு

இந்திய மகளிர் ஹாக்கி அணி

இந்திய மகளிர் அணி டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கத்தை தவறவிட்டிருந்தாலும் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

 • Share this:
  ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகளுக்கு ரூ50 லட்சம் பரிசு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.

  ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. டோக்கியோ ஒலிம்பிக்கில் நேற்று நடந்த மகளிர் ஹாக்கி அணி வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி, பிரிட்டனிடம் போராடி தோல்வி தழுவியது.

  Also Read: Tokyo Olympics| இந்திய மகளிர் ஹாக்கி அணி போராடி தோல்வி- பிரிட்டனுக்கு வெண்கலம்

  இந்தியா ஒரு கட்டத்தில் 0-2 என்று பிரிட்டனிடம் பின் தங்கி பிறகு 3-2 என்று முன்னிலை பெற்று நம்பிக்கை அளித்தது. அதன்பின் ஆட்டம் சமநிலை அடைந்தது. கடைசி 15 நிமிடத்தில் பிரிட்டன் ஒரு கோல் அடிக்க அது பிரிட்டனின் வெற்றியை உறுதிசெய்தது. அரையிறுதிவரை முன்னேறிய இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

  Also Read:  வெறுங்காலுடன் ஓடி கஷ்டப்பட்டவர்.. இரண்டாவது முறையாக ஒலிம்பிக் சென்றுள்ளான் - ஆரோக்கிய ராஜீவ் அம்மா நெகிழ்ச்சி

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தனது ட்விட்டரில் பதிவில், “ இந்திய மகளிர் அணி டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கத்தை தவறவிட்டிருந்தாலும் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாடிய ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகளுக்கு, மாநில அரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும். மேலும் அந்த விராங்கனைகளின் பழைய வீடுகளை புணரமைத்து, நவீன வடிவமைப்புகளுடன் புதிய வீடுகளாக கட்டித் தரப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: