நடைபயிற்சி சென்ற மாவட்ட நீதிபதி கார் ஏற்றி கொலை: சிசிடிவி காட்சியால் அதிர்ச்சி - உச்ச நீதிமன்றம் தலையீடு

நீதிபதி கொலை

ஜார்கண்ட் மாவட்டத்தில் மாவட்ட நீதிபதி கொல்லப்பட்ட விவகாரத்தில் சி.சி.டி.வி காட்சி வெளியானது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளது.

 • Share this:
  ஜார்கண்ட் மாநிலத்தில் மாவட்ட நீதிபதியாக உத்தர் ஆனந்த் பணியாற்றிவந்தார். அவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் காலையில் நடைப்பயிற்சி சென்றுள்ளார். அப்போது அவர் மீது வாகனம் மோதியதில் சாலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.

  மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அடிப்பட்டவர் யார் என்று தெரியாத நிலையில் உடல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில், நீதிபதி உத்தம் ஆனந்த் காலையிலிருந்து காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

  அதன்பிறகு, குடும்பத்தினரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடலைக் காட்டியுள்ளனர் காவல்துறைனர். அப்போது, நீதிபதியின் குடும்பத்தினரால் அவரது உடல் அடையாளம் காணப்பட்டது. அதனையடுத்து, நீதிபதி உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். நீதிபதி விபத்துக்குள்ளான இடத்திலிருந்த சி.சி.டிவி காட்சிகளைப் பார்க்கும்போது, வேண்டுமென்ற வாகனத்தைக் கொண்டு இடித்துக்கொல்லப்பட்டது தெரியவந்தது. நீதிபதி இடித்துக் கொல்லப்பட்ட வாகனம், அவரைக் கொல்வதற்கு சிறிது முன்னர் திருடப்பட்டுள்ளது.


  நீதிபதி பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நீதிபதி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தவேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கைவைத்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘இந்த விவகாரம் தொடர்பாக ஜார்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் பேசியுள்ளேன்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுதொடர்பாக ஜார்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் வழக்கு விசாரணை நடைபெறும். நாங்கள் இந்த வழக்கை கவனத்தில் கொள்வோம்’ என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இதுவரையில் 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  Published by:Karthick S
  First published: