ஹோம் /நியூஸ் /இந்தியா /

வயலில் புல் அறுத்துக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த போலீஸ்காரர்கள்... பிறப்புறுப்பில் எட்டி உதைத்த கொடூரம்..

வயலில் புல் அறுத்துக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த போலீஸ்காரர்கள்... பிறப்புறுப்பில் எட்டி உதைத்த கொடூரம்..

ஜார்கண்டில் 50 வயது பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த போலீசார்

ஜார்கண்டில் 50 வயது பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த போலீசார்

புகாரின் அடிப்படையில் குற்றச்செயலில் ஈடுபட்ட காவலர்கள் கிருஷ்ண காந்த் திவாரி, அஜய் பாரா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Jharkhand, India

  ஜார்கண்டில் 50 வயது பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த இரு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தின் லோஹர்தகா மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி வழக்கம் போல விவசாய வேலைக்கு சென்றுள்ளார்.

  அங்குள்ள வயல் பகுதியில் புல் அறுக்கும் வேலையில் அவர் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, குடி போதையில் இருந்த காவல்துறையினர் இருவர் அங்கு வந்துள்ளனர். போதையில் தனியாக இருந்த 50 வயது பெண்ணிடம் அத்துமீறி அங்கேயே வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் அந்த பெண்ணின் பிறப்புறுப்புகளில் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அந்த பெண் படுகாயம் அடைந்து, அவருக்கு அதிகளவில் ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. பின்னர் வயலில் காயமடைந்திருந்த பெண்ணை மீட்டு தலைநகர் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் உறவினர் சேர்த்துள்ளனர்.பாதிக்கப்பட்ட பெண் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

  இதையும் படிங்க: மனைவியை காப்பாற்ற வேண்டியது கணவனின் கடமை.. தட்டி கழிக்க முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

  இந்த சம்பவம் குறித்து பெண்ணின் குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில், குற்றச்செயலில் ஈடுபட்ட காவலர்கள் கிருஷ்ண காந்த் திவாரி, அஜய் பாரா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது அலுவல் ரீதியான நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. காவல்துறையினரே இது போன்ற கொடூர குற்றச்செயலில் ஈடுபட்டது ஜார்கண்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Jharkhand, Police arrested, Rape case