தனது தொகுதியில் நடிகை கங்கனா ரணாவத்தின் கன்னத்தைவிட மென்மையான சாலைகள் போடுவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ உறுதியளித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோச்சா, காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது, இந்நிலையில் அம்மாநிலத்தின் Jamtara தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவான டாக்டர். இர்ஃபான் அன்சாரி என்பவர், தனது தொகுதியில் உள்ள சாலைகள் நடிகை கங்கனாவின் கன்னத்தைவிட மென்மையானவையாக அமைக்கப்படும் என உறுதி அளித்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்திலும் அவர் பதிவேற்றியுள்ளார்.
அந்த வீடியோவில் எம்.எல்.ஏ கூறியிருப்பதாவது, ”திரைப்பட நடிகை கங்கனா ரணாவத்தின் கன்னங்களை விட ஜம்தாரா தொகுதியின் சாலைகள் மென்மையாக அமைக்கப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன். 14 உலகத் தரம் வாய்ந்த சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
#WATCH | Jharkhand: I assure you that roads of Jamtara "will be smoother than cheeks of film actress Kangana Ranaut"; construction of 14 world-class roads will begin soon..: Dr Irfan Ansari, Congress MLA, Jamtara
(Source: Self-made video dated January 14) pic.twitter.com/MRpMYF5inW
— ANI (@ANI) January 15, 2022
நடிகையின் கன்னத்தை ஒப்பிட்ட எம்.எல்.ஏவின் பேச்சு தொடர்பான அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.. எம்.எல்.ஏ இர்ஃபான் அன்சாரி இது போல சர்ச்சையில் சிக்குவது முதல் முறை கிடையாது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் அவர் முகக்கவசம் அணிவது குறித்தும் சர்ச்சை கருத்து ஒன்றை கூறியிருக்கிறார்.
யாரும் முகக்கவசங்களை நீண்ட நேரம் அணியக் கூடாது. அது உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முகக்கவசத்தை நீண்ட நேரம் அணிவதால், உடலில் இருந்து வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடு வாயுவையே மீண்டும் உள்ளிருக்க நேரிடும் என அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே கொரோனா பரவல் உச்சத்தில் இருந்து வரும் நேரத்தில் முகக்கவசம் அணிவது மட்டுமே பாதுகாப்பானது என்றாகிவிட்ட நிலையில், முகக்கவசத்துக்கு எதிரான எம்.எல்.ஏவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் தான் இதை ஒரு டாக்டர் என்ற முறையில் கூறுகிறேன் என விளக்கம் அளித்திருந்தார். மேலும் அன்சாரியின் பேச்சு எதிர்கட்சி முகாமிலும், சொந்தக் கட்சினராலும் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அரசியல்வாதி ஒருவர் நடிகையுடன் கன்னத்துடன் ஒப்பிட்டு பேசியது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே கடந்த 2005ம் ஆண்டு ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், நடிகையும் அரசியல்வாதியுமான ஹேமாமாலினியின் கன்னத்துடன் ஒப்பிட்டு பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.
இதே போல கடந்த ஆண்டு நவம்பரில் ராஜஸ்தான் அமைச்சர் ராஜேந்திர சிங் குதா, மாநிலத்தில் உள்ள சாலைகளை நடிகை கத்ரினா கைஃபின் கன்னத்துடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதே போல கடந்த மாதம் மற்றொரு ராஜஸ்தான் அமைச்சர் குல்பராவ் பாட்டீல் ஹேமா மாலினியின் கன்னத்துடன் ஒப்பிட்டு பேசியதை மகளிர் நல ஆணையம் கண்டித்ததால் அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, Kangana Ranaut