ஹோம் /நியூஸ் /இந்தியா /

அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல், அமலாக்கத்துறையை ஏவிவிடும் பாஜக - ஜார்க்கண்ட் முதல்வர் விமர்சனம்

அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல், அமலாக்கத்துறையை ஏவிவிடும் பாஜக - ஜார்க்கண்ட் முதல்வர் விமர்சனம்

ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்

ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்

சுரங்க முறைகேடு ஊழல் குற்றச்சாட்டில் அமலகாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Jharkhand, India

  2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை அம்மாநிலத்தின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி வைத்து எதிர்கொண்டது. இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரான ஹேமந்த் சோரன் அம்மாநில முதலமைச்சரானார்.

  இந்நிலையில், கடந்தாண்டு அங்கு நடைபெற்ற நிலக்கரி சுரங்க ஏலத்தில் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தனது பெயரில் சுரங்கம் ஒன்றை குத்தகைக்கு எடுத்துள்ளார். இது அவருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிரானது எனக் கண்டறிந்து இது தொடர்பாக எதிர்க்கட்சியான பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.

  இந்த புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை பறிக்க மாநில ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பியது. இதைப்பெற்றுக்கொண்ட மாநில ஆளுநர், இரண்டாவது கருத்தை பெற காத்திருப்பதாக தெரிவித்தார்.

  இந்நிலையில், ரூ.1,000 கோடி மதிப்பில் சட்டவிரோதமாக சுரங்கத்தை கைப்பற்றிய வழக்கில் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா உள்ளிட்ட மூன்று பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் முதலமைச்சரும் உள்ளார்.அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது.

  இதையும் படிங்க: Gujarat Election: குஜராத் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு

  இன்று முதலமைச்சர் நேரில் ஆஜராவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இன்று முதலமைச்சர் ராய்பூரில் உள்ள பழங்குடி இன விழாவில் பங்கேற்க உள்ளார் என மக்கள் தொடர்பு துறை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தனது ட்விட்டர் பதிவில், "எங்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத பாஜக விசாரணை அமைப்புகளை ஏவி நெருக்கடி தர பார்கிகிறது. இதற்கு ஜார்கண்ட் மக்கள் தக்க பதிலடி தருவார்கள்" என மத்திய பாஜக அரசை விமர்சித்துள்ளார். எனவே, அமலாக்கத்துறை விசாரணையை ஹேமந்த் சோரன் புறக்கணிக்கவே அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

  Published by:Kannan V
  First published:

  Tags: Coal, Enforcement Directorate, Hemant Soren, Jharkhand