Home /News /national /

"மக்கள் பொருள்களை வாங்குகிறார்கள்.. பா.ஜ.க எம்.எல்.ஏக்களை வாங்குகிறது".. ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சாடல்!

"மக்கள் பொருள்களை வாங்குகிறார்கள்.. பா.ஜ.க எம்.எல்.ஏக்களை வாங்குகிறது".. ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சாடல்!

முதல்வர் ஹேமந்த் சோரன்

முதல்வர் ஹேமந்த் சோரன்

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் எதிராக பா.ஜ.க சுமத்திய ஊழல் புகாரில் இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Jharkhand, India
    ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி ஆட்சி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரன் சுரங்க குத்தகை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்தாக பா.ஜ.க குற்றம் சாட்டியது. இதையடுத்து முதல்வர் சட்டமன்றத்தில் நடத்திய நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.

    இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மத்தியில் தனது கட்சி எம்.எல்.ஏ - களை பா.ஜ.க வாங்க முயல்வதாக முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டினார். மற்ற மாநிலங்களில் நடத்தியது போல் இங்கும் குதிரை பேரத்தை நடத்துவதாக அவர் கடுமையாகக் குற்றம் சாட்டினார். பாஜகவிடம் இருந்து காப்பாற்றத் தனது கட்சி 49 எம்.எல்.ஏ - களை காங்கிரஸ் ஆளும் சண்டிகர் மாநிலத்திற்கு அனுப்பி சொகுசு விடுதியில் பாதுகாத்துத் தங்க வைத்தார். மேலும் சட்டமன்ற கூட்டத்திற்கு அவர்களை விமானத்தின் மூலம் கூட்டிக்கொண்டு வந்து வாக்கெடுப்பில்  கலந்துகொள்ள வைத்தார்.

    முதல்வர் பதவியை தற்போது தக்க வைத்துக்கொண்ட முதல்வர் ஹேமந்த் சோரன், பாஜக உட்கட்சி போரை ஏற்படுத்த முயன்றது ஆனால் தற்போது அவர்கள் பின்னிய வலையில் அவர்களே விழுந்து விட்டனர் என்று கூறினார். மேலும் நாம் மக்கள் துணி, ரேஷன், மளிகை பொருட்களை வாங்குவதைப் பார்த்து இருப்போம் ஆனால் பாஜக எம்.எல்.ஏ - களை வாங்குகின்றது. நாட்டின் முதல் பழங்குடி குடியரசுத் தலைவரைக் கொண்டுவந்து, பழங்குடி முதல்வரைப் பதவியிலிருந்து நீக்க நினைக்கின்றனர் என்று சாடினார்.

    Also Read : மழையால் ரூ.225 கோடி இழப்பு.. கவலையில் பெங்களூரு ஐடி நிறுவனங்கள் - இழப்பு குறித்து விவாதிப்பதாக முதல்வர் உறுதி

    மேலும் தொடர்ந்து முதல்வர் ஹேமந்த் சோரன் கூறுகையில், பாஜக ஜனநாயகத்தை அழித்துவிட்டது. நாங்கள் எங்கள் பலத்தைச் சட்டமன்றத்தில் காட்டியுள்ளோம். எந்த அரசியல் சூழ்நிலை வந்தாலும் நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
    Published by:Janvi
    First published:

    Tags: BJP, Hemant Soren, Jharkhand

    அடுத்த செய்தி