ஹோம் /நியூஸ் /இந்தியா /

இட ஒதுக்கீட்டை 77 சதவீதமாக உயர்த்தி மசோதா - ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

இட ஒதுக்கீட்டை 77 சதவீதமாக உயர்த்தி மசோதா - ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

ஜார்கண்ட் சட்டப்பேரவையில் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்

ஜார்கண்ட் சட்டப்பேரவையில் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்

மாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 60 சதவீத இட ஒதுக்கீட்டை 77 சதவீதமாக உயர்த்தி சட்டப்பேரவையில் ஜார்கண்ட் ஆளும் கூட்டணி அரசு இன்று தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Jharkhand, India

  ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ஹேமந்த் சோரேன் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகிய கட்சிகளின் கூட்டணி பெரும்பான்மை இடங்களை பிடித்தன. ஹேமந்த் சோரேனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 30 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும் வென்று 81 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவையில் கூட்டணி ஆட்சி அமைத்தன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரான ஹேமந்த் சோரன் அம்மாநில முதலமைச்சரானார்.

  இந்த கூட்டணி தேர்தல் காலத்தில் இட ஒதுக்கீடு எண்ணிக்கை உயர்த்துவோம் என வாக்குறுதி அளித்து தேர்தலை எதிர்கொண்டது. முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைத்து 3 ஆண்டுகள் தாண்டியுள்ள நிலையில்,தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேறுவதற்கான முக்கிய முன்னெடுப்பாக மாநிலத்தில் இட ஒதுக்கீட்டை உயர்த்த சிறப்பு மசோதாவை உருவாக்கியுள்ளார். அதன்படி, மாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 60 சதவீத இட ஒதுக்கீட்டை 77 சதவீதமாக உயர்த்தி சட்டப்பேரவையில் ஜார்கண்ட் ஆளும் கூட்டணி அரசு இன்று தாக்கல் செய்தது. எதிர்க்கட்சியான பாஜக இந்த மசோதா தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பெரும்பான்மை எண்ணிக்கையுடன் மசோதாவானது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  தற்போதைய நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் எஸ்டி பிரிவினருக்கு 26 சதவீதமும் எஸ்சி பிரிவினருக்கு 10 சதவீதமும் இட ஒதுக்கீடு உள்ளது. அதேபோல் ஓபிசி பிரிவினருக்கு 14 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இந்நிலையில் புதிய மசோதாவில் மிகப் பிற்படுத்தப்பட்டவர்கள்(EBC) என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டு 15 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு 12 சதவீதமாகவும், எஸ்டி பிரிவினருக்கு 28 சதவீதமாகவும் இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது. ஓபிசி பிரிவு மறுவரையறை செய்யப்பட்டு(இபிசி பிரிவு உருவாக்கப்பட்டதால்) இட ஒதுக்கீடு 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: சுகேஷ் சந்திரசேகரின் பரபரப்பு லெட்டர்.. கெஜ்ரிவாலுக்கு உண்மை கண்டறியும் சோதனையை வலியுறுத்தும் காங்கிரஸ்!

  மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த மசோதாவை அரசியல் சாசனத்தின் ஒன்பதாவது அட்டவணையில் வைக்க கோரி ஜார்கண்ட் மாநில அரசு மத்திய அரசுக்கு வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Hemant Soren, Jharkhand, Reservation