திருப்பதியில் உள்ள தேவஸ்தான கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 5.400 கிலோ எடையுள்ள வெள்ளி கிரீடம், இரண்டு தங்க மோதிரங்கள், இரண்டு தங்க நெக்லஸ்கள் மாயமாகியுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
7,36,376 ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்கள் கருவூலத்திலிருந்து மாயமானதை கண்டுபிடித்த தேவஸ்தான அதிகாரிகள் வெளிப்படையான நடவடிக்கையை தவிர்த்து 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் உதவி நிர்வாக அதிகாரி சீனிவாசலு சம்பளத்திலிருந்து மாதம் 25 ஆயிரம் ரூபாயை பிடித்தம் செய்து இழப்பை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக பாஜகவின் ஆந்திர மாநில செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பதி பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று பேட்டியளித்த பானு பிரகாஷ் ரெட்டி திருப்பதியில் உள்ள தேவஸ்தான கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஆபரணங்களில் 5 கிலோ 400 கிராம் எடையுள்ள வெள்ளி கிரீடம், தங்க மோதிரங்கள் 2, தங்க நெக்லஸ்கள் 2 ஆகியவை காணாமல் போய்விட்டன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கருங்குளத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் போது ஆபரணங்கள் மாயமானது பற்றி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தெரியவந்தது. உண்மை வெளியில் கூற தயங்கிய தேவஸ்தான அதிகாரிகள் காணாமல்போன ஆபரணங்களின் மதிப்பு 7,36,376 ரூபாய் என்று மதிப்பீடு செய்து, அதற்கான தொகையை உதவி நிர்வாக அதிகாரி சீனிவாசலு ஊதியத்திலிருந்து மாதம் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை ரகசியமாக பிடித்தம் செய்து வருகின்றனர்.
இது தவிர தேவஸ்தானத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற சில ஆவணங்களில் இருக்க வேண்டிய அளவை விட சற்று அதிகமாக ஆபரணங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கருவூலத்தில் இருப்பு வைக்கப்பட்டு இருக்கும் ஆபரணங்கள் குட்டி போட்டால் மட்டுமே இது சாத்தியம்.
எனவே பக்தர்கள் மத்தியில் தேவஸ்தானத்தில் இருப்பு இருக்கும் ஆபரணங்களை பற்றிய தெளிவான மனநிலையை ஏற்படுத்தும் வகையில் ஆபரண இருப்பு பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்றை தேவஸ்தானம் வெளியிடவேண்டும் என்று கூறினார்.
Published by:Sankar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.