ஹோம் /நியூஸ் /இந்தியா /

கணவர் நலன் வேண்டி இப்படி ஒரு விழாவா? ரூ.3 ஆயிரம் கோடிக்கு விற்பனையான தங்கம் வெள்ளி!

கணவர் நலன் வேண்டி இப்படி ஒரு விழாவா? ரூ.3 ஆயிரம் கோடிக்கு விற்பனையான தங்கம் வெள்ளி!

கர்வா சவுத் நாள்

கர்வா சவுத் நாள்

இன்றைய நாளில் கணவர் உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் வேண்டி உணவு உண்ணாமல் நோன்பு இருந்து இரவு சல்லடையில் தீபம் ஏற்றி நிலவைப் பார்ப்பதும், பின்னர் அந்த சல்லடை வழியாக கணவனைப் பார்ப்பதும் தான் இந்நாளில் சிறப்பு.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கணவரின் நலன் வேண்டிய வட மாநில பெண்கள் கொண்டாடும் கர்வா சவுத் நாளில் நாடு முழுவதும் ரூபாய் 3 ஆயிரம் கோடி அளவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி விற்பனையாகியுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு வகையானக் கலாச்சாரங்களும், பண்டிகைகளும் இருக்கக்கூடும். சகோதரத்துவத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ரக்ஷா பந்தன், உழவருக்கு மரியாதை செலுத்தும் தைப்பொங்கல் என அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த வரிசையில் கணவரின் நலன் வேண்டி வட மாநில பெண்கள் கொண்டாடும் கர்வா சவுத் மிகவும் பிரபலமானது.

இன்றைய நாளில் கணவர் உடல் நலத்துடன் நீண்ட ஆயுள் வேண்டி உணவு உண்ணாமல் நோன்பு இருந்து இரவு சல்லடையில் தீபம் ஏற்றி நிலவைப் பார்ப்பதும், பின்னர் அந்த சல்லடை வழியாக கணவனைப் பார்ப்பதும் தான் இந்நாளில் சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக இந்த கர்வா சவுத் கொண்டாடப்பட்டு வந்தாலும், கொரோனா தொற்றின் காரணமாக இரண்டு ஆண்டுகளாக எவ்வித பண்டிகைகளும் கொண்டாடப்படவில்லை. இந்த சூழலில் தான் இந்தாண்டு வெகு விமரிசையாக இந்தாண்டு அக்டோபர் 13 மற்றும் அக்டோபர் 14 ஆகிய இரண்டு நாள்களில் கொண்டாடப்பட்டது.

Read More : ஈரான் பெண்களுக்கு ஆதரவாக ஆடைகளை களைந்து அரை நிர்வாண வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை

கர்வா சவுத் நாளில் நகை விற்பனை:…

தன்னுடைய நலன் வேண்டிய விரதம் இருக்கும் மனைவிகளுக்காக, கணவர்களும் தங்கம் அல்லது வெள்ளி போன்றவற்றில் பரிசைக் கொடுத்துள்ளனர். இவ்வாறு விலையுயர்ந்த பொருள்களை வாங்கியதால் சென்றை ஆண்டை விட தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய நகைக்கடை மற்றும் தங்க நகைகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்ற ஆண்டு வட மாநிலங்கள் விமரிசையாக கொண்டாடிய கர்வா சவுத் நாளில் ரூபாய் 2,200 கோடிக்கு விற்பனை நடந்தது என்றும், இந்த ஆண்டு ரூபாய் 3 ஆயிரம் கோடிக்கு தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் விற்பனையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக டெல்லியில் 24 காரட் தங்கத்தின் விலை ரூபாய் 52 ஆயிரம் எனவும் 22 காரட் 10 கிராமுக்கு ரூ. 48 ஆயிரம் மற்றும் வெள்ளி கிலோவுக்கு ரூ59,000 என விற்கப்பட்டது என கூறியுள்ளனர்.தற்போது ஏற்பட்டுள்ள இந்த விலை அதிகரிப்பு என்பது நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தொடர்ந்து ஏற்றத்தை காணும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த கர்வா சவுத் விரதத்திற்குப்பிறகு புஷ்ய நட்சத்திரம், , லக்ஷ்மி பூஜை, தீபாவளி, பயா தூஜ், சத் பூஜை மற்றும் துளசி விழா உள்ளிட்ட பிற பண்டிகைகளும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவதால் நிச்சயம் நகை விற்பனை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேஷன் நகைகளில் அதிகரிக்கும் ஆர்வம்…

ஒவ்வொரு பண்டிகை நாள்களிலும் நகைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது என்பதால், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப நகைகள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பேஷன் நகைகள் மீது இளைஞர்கள் மற்றும் பெண்களின் மோகம் அதிகரித்துள்ளது. செயின் , வளையல்கள், ஜோக்கர் போன்ற நகைகளின் மீது மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டனர். பேஷன் நகைகளோடு பாரம்பரிய தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மீதும் ஆர்வம் குறையவில்லை என்கின்றனர் நகைக்கடை உரிமையாளர்கள்..

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Karva Chauth