Home /News /national /

இன்னும் சில மாதங்களில் மீண்டும் சேவையைத் தொடங்குவோம் - ஜெட் ஏர்வேஸ் CEO தகவல்

இன்னும் சில மாதங்களில் மீண்டும் சேவையைத் தொடங்குவோம் - ஜெட் ஏர்வேஸ் CEO தகவல்

ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ்

நாங்கள் ஒரு விமானத்தை ஆர்டர் செய்யும் போது, அது நிச்சயமாக நவீன மற்றும் எரிபொருள் திறன் கொண்ட விமானங்களுக்கானதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

புதிய ப்ரமோட்டர்களின் கீழ் வரும் செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாதத்திற்குள் ஜெட் ஏர்வேஸ் மீண்டும் வானத்தில் பறக்க வாய்ப்புள்ளது என்று விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சஞ்சீவ் கபூர் தெரிவித்து உள்ளார். ஜெட் ஏர்வேஸ் ஏப்ரல் 2019ல் பெரும் நிதி நெருக்கடி காரணமாக தனது செயல்பாடுகளை நிறுத்தியது. இப்போது, 2022ம் ஆண்டில் திவால் சட்டத்தின் கீழ் புத்துயிர் பெறும் முதல் இந்திய விமான நிறுவனம் ஆகும்.

இதனிடையே ஏஓசி (ஏர் ஆப்ரேட்டர்ஸ் சர்டிஃபிக்கேட் -air operators certificate) ரீ வேலிடேஷன் செய்யப்பட்ட பிறகு வரும் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் விமானங்களை இயக்க தங்களது ஏர்லைன்ஸ் இலக்கு வைத்துள்ளதாக சஞ்சீவ் கபூர் கூறி உள்ளார். லீஸுக்கு விடப்பட்ட போயிங் 737 விமானத்தை பயன்படுத்தி ஏப்ரல் இறுதிக்குள் எங்களை நிரூபிக்க உள்ளோம். இதனை தொடர்ந்து மே மாத தொடக்கத்தில் எங்களது AOC மறுமதிப்பீடு செய்யப்படும் என்று நம்புவதாக கபூர் கூறி உள்ளார்.

இது மிகவும் சிக்கலான, நீண்ட மற்றும் கடினமான செயல்முறையாகும். இப்போது நாங்கள் இறுதி கட்டத்தில் இருக்கிறோம். அனைத்தும் நல்லபடியாக நடக்கும் என்று நம்புகிறோம். ஏர் ஆபரேட்டர் பெர்மிட் (Air Operator Permit) கிடைத்த பின் சில மாதங்களில் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க தயாராகிவிட முடியும் என்று எதிர்பார்க்கிறோம். எப்படியாயினும் அக்டோபர் மாத இறுதிக்குள் எங்கள் விமான சேவையை துவக்க நாங்கள் திட்டம் வைத்து உள்ளோம். அக்டோபருக்கு முன்னதாகவே கூட இது நடக்கலாம். ஆனால் நாங்கள் மீண்டும் சேவையை துவக்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதே நிலவரம் என்று கூறி உள்ளார் சஞ்சீவ் கபூர்.also read  : சிறையில் உள்ள கணவன் மூலம் குழந்தை பெற விரும்பிய மனைவி! பரோல் வழங்கிய ராஜஸ்தான் நீதிமன்றம்
முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தால் (National Company Law Tribunal) அங்கீகரிக்கப்பட்ட தீர்மான திட்டத்தின்படி, இந்த ஆண்டு மார்ச் 22-ஆம் தேதிக்குள் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் இருந்து அதன் AOC-யை ஜெட் ஏர்வேஸ் பெற்றிருக்க வேண்டும். ஆனால் கல்ராக் கேபிடல்-முராரி லால் ஜலான் கூட்டமைப்பு (Kalrock Capital-Murari Lal Jalan consortium), இந்த கால கெடுவை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்குமாறு தீர்ப்பாயத்திடம் வலியுறுத்தியது. இதனிடையே இம்மாத இறுதிக்குள் இந்த செயல்முறையை முடித்து விடுவதாக சஞ்சீவ் கபூர் தற்போது கூறி உள்ளார்.
also read : மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

கர்லாக்-ஜாலான் கூட்டமைப்பு அதிக முதலீடுகளை மேற்கொள்ள AOC பெர்மிட் அனுமதிக்கும். மேலும் இது விமான நிலையங்களில் பார்க்கிங் இடங்களைப் பெறுவதற்கும் பயன்படுத்தப்படலாம். இதனிடையே ஜெட் ஏர்வேஸ் 2.0 விமானங்கள் குறைந்தபட்சம் சில மாதங்களுக்கு குத்தகைக்கு இயக்கப்படும் என்று சஞ்சீவ் கபூர் கூறினார். பழைய மற்றும் புதியது என இது சம்பந்தமாக கருத்தில் கொள்ள நிறைய விமானங்கள் உள்ளன. எங்கள் தேவைகள் மற்றும் செலவு பலன்களை கருத்தில் கொண்டு எங்களுக்கு எது சிறந்தது என்பதை நாங்கள் தீர்மானிப்போம்.

நாங்கள் ஒரு விமானத்தை ஆர்டர் செய்யும் போது, அது நிச்சயமாக நவீன மற்றும் எரிபொருள் திறன் கொண்ட விமானங்களுக்கானதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டு உள்ளார். எரிபொருள் விலை எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும் மற்ற செலவுகள் போட்டி நன்மைகளை தீர்மானிக்கும் என்றார்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Flight

அடுத்த செய்தி