இந்தியாவையே உலுக்கிய புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்டவரும், ஜெய்ஷ் இ தீவிரவாத இயக்கத் தலைவனான மசூத் அசாரின் உறவினருமான முகமது இஸ்மல் அல்வி என்ற தீவிரவாதியை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொலை செய்தனர். இதன் மூலம் புல்வாமா தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் கொல்லப்பட்டதாக லெப்டினன்ட் ஜெனரல் பாண்டே தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தக்க பதிலடியை கொடுக்கும் விதத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாதிகள் பயிற்சி முகாமினை விமானத் தாக்குதல் மூலம் அழித்தது இந்திய ராணுவம்.
Also Read: 'எலும்பை உடைத்துவிடுவேன்': கட்சியினர் முன் சக எம்.எல்.ஏவை மிரட்டிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ!
1989ம் ஆண்டுக்கு பிறகு இந்திய ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட இந்த மிகப்பெரிய தாக்குதலில் மூளையாக செயல்பட்ட முக்கிய தீவிரவாதியான லம்பு என அறியப்படும் முகமது இஸ்மல் அல்வி என்பவரை ராணுவத்தினர் இன்று சுட்டு வீழ்த்தினர்.
லம்பு கொல்லப்பட்டதை சினார் கார்ப்ஸ் கமாண்டர் படைப்பிரிவைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் பாண்டே உறுதிப்படுத்தினார்.
Also Read: 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அழிந்த காட்டு வேட்டை நாய் இனத்தின் எலும்புக்கூடு எச்சங்கள் கண்டுபிடிப்பு!
புல்வாமா தாக்குதலில் மூளை சலவை செய்யப்பட்ட காஷ்மீர் இளைஞர் ஒருவரை தற்கொலைப்படை தாக்குதலை நடத்த தயார்ப்படுத்தியவர் முகமது இஸ்மல் அல்வி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது லம்பு கொல்லப்பட்டதன் மூலம் புல்வாமா தாக்குதலுக்காக ராணுவம் பழிதீர்த்துள்ளது, மேலும் இந்த வழக்கிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
காஷ்மீரில் இளம் வயதினரை மூளை சலவை செய்து அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததில் லம்பு முக்கியமானவராக செயல்பட்டுள்ளார். இவர் ஜெய்ஷ் இ தீவிரவாத இயக்கத் தலைவனான மசூத் அசாரின் உறவினர் ஆவார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian army, Jammu and Kashmir, Pulwama, Pulwama Attack