ரயிலில் ஜட்டியுடன் வாக்கிங் சென்ற எம்.எல்.ஏ - பயணிகள் அதிர்ச்சி!

ஜட்டியுடன் வாக்கிங் சென்ற எம்.எல்.ஏ

எம்.எல்.ஏ ஜட்டி, பனியனில் நடைபோட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலான நிலையில் நெட்டிசன்களிடையே பேசுபொருளாக மாறியது.

  • Share this:
ரயிலில் எம்.எல்.ஏ ஒருவர் ஜட்டியுடன் நடந்து சென்றதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பாட்னாவில் இருந்து டெல்லி சென்ற தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் நேற்றைய தினம் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏவான கோபால் மண்டல் நேற்று பயணித்தார். இந்த பயணத்தின் போது எம்.எல்.ஏ தனது ஆடைகளை களைந்து விட்டு ஜட்டி பணியனுடன் அங்குமிங்கும் நடந்து சென்றதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பொதுமக்கள் செல்லும் ஒரு ரயிலில் எம்.எல்.ஏ ஒருவர் இப்படி அநாகரிகமாக நடந்து கொண்டதால், கடுப்பான பயணிகள் சிலர் இது குறித்து எம்.எல்.ஏவிடமும் அவரின் ஆதரவாளர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அநாகரிகமாக நடந்து கொண்டவர் எம்.எல்.ஏ என அறியாமலேயே பயணிகள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அங்கு பிரச்னை பெரிதாகும் வகையில் மாறியதையடுத்து எம்.எல்.ஏவின் நடவடிக்கை குறித்து ரயில்வே டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினரிடமும் சக பயணிகள் புகார் அளித்த நிலையில், அவர்கள் தலையிட்டு இருதரப்பை சமாதானம் செய்து வைத்து நிலைமையை சமாளித்திருக்கின்றனர்.இதனிடையே எம்.எல்.ஏ ஜட்டி, பனியனில் நடைபோட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலான நிலையில் நெட்டிசன்களிடையே பேசுபொருளாக மாறியது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ கோபால் மண்டல் விளக்கம் அளித்திருக்கிறார். இது குறித்து அவர் அளித்திருக்கும் பேட்டியில், நான் ரயிலில் ஏறியதில் இருந்தே எனக்கு கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்பட்டது, அதனால் தான் ஜட்டி பனியனில் இருந்தேன். நம்புங்கள் நான் பொய் கூறவில்லை” என தெரிவித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published: