ஹோம் /நியூஸ் /இந்தியா /

எடியூரப்பா அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவா? குமாரசாமி பதில்

எடியூரப்பா அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவா? குமாரசாமி பதில்

குமாரசாமி

குமாரசாமி

"தகுதிநீக்க நடவடிக்கையை மேற்கொள்வதைத் தடுக்கும் வகையில், சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை வரும் திங்கட்கிழமை கொண்டுவர உள்ளதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்"

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  கர்நாடகாவில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பாஜக திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், எடியூரப்பா தலைமையிலான அரசுக்கு ஆதரவளிக்கும் பேச்சுக்கே இடமில்லை என முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

  கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுள்ளார். மேலும், சட்டப்பேரவையில் வரும் நாளை நம்பிக்கை வாக்கு கோர உள்ளார்.

  இந்நிலையில், மாண்டியா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான பூகனகெரேவுக்கு எடியூரப்பா சென்றார். தனி ஹெலிகாப்டர் மூலம் சென்ற அவர், சித்தலிங்கேஸ்வரா கோயிலில் வழிபாடு நடத்தினார்.

  இதனிடையே, சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பாஜக திட்டமிட்டுள்ளது. அதிருப்தி எம்எல்ஏ-க்கள் 3 பேரை தகுதிநீக்கம் செய்துள்ள சபாநாயகர், மீதமுள்ள 14       எம்எல்ஏ-க்கள் மீது விரைந்து முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

  இதையடுத்து, தகுதிநீக்க நடவடிக்கையை மேற்கொள்வதைத் தடுக்கும் வகையில், சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை வரும் திங்கட்கிழமை கொண்டுவர உள்ளதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, புதிய சபாநாயகராக பாஜக-வைச் சேர்ந்த போப்பையா தேர்வுசெய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இது தொடர்பாக ஆலோசிக்க, இன்று பெங்களூருவில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

  முன்னதாக, மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி எம்எல்ஏ-க்கள் சிலர் பாஜகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கலாம் என குமாரசாமியிடம் கூறியதாக தகவல் வெளியானது. அதனை திட்டவட்டமாக மறுத்துள்ள குமாரசாமி, எடியூரப்பா தலைமையிலான அரசுக்கு ஆதரவளிக்கும் பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்துள்ளார்.

  மேலும், கட்சி வளர்ச்சிப் பணியில் கவனம் செலுத்தப் போவதாகவும், சாமானிய மக்களுக்கான போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

  Published by:Sankar
  First published:

  Tags: BS Yeddyurappa, HD Kumaraswamy, Karnataka