இந்தியாவில் BF.7 திரிபு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் கொரோனா பரிசோதனை கடந்த 24 ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி கடந்த கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 6000- க்கும் அதிகமான சர்வதேச பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதில் 39 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, மரபணு பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் அமல்படுத்தபட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். சர்வதேச பணிகளுக்கான கொரோனா சோதனைகள், மாஸ்க் பயன்பாடு மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடித்தல் உள்ளிட்ட கொரோனா நடத்தை விதிகள் முழுமையாக பின்பற்றப் படுகின்றவா? விமான நிலைய டெர்மினல்களில் போதிய அடிப்படை மருத்துவ கட்டமைப்புகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய உள்ளார்.
இதனிடையே, BF7 கொரோனா பாதிப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றாலும், அடுத்த 30-40 நாட்களில் இதன் பாதிப்பு இந்தியாவில் நிச்சயம் அதிகரிக்கும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய சுகாதாரத்துறை மற்றும் தேசிய தடுப்பூசி நிபுணர்கள் குழு இணைந்து BF 7 திரிபு கொரோனா பாதிப்பிற்கு எதிராக கொரோனா தடுப்பூசிகளின் செயல்பாடுகளை மேப்பிங் முறையில் ஆய்வு செய்து வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்ட், கோவாக்சின் மற்றும் பயன்பாட்டிற்கு வர உள்ள incovacc உள்ளிட்ட தடுப்பூசிகள் BF.7 பாதிப்பை முழுமையாக எதிர்கொள்ளும் திறன் படைத்துள்ளதா, இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசிக்கு அவசியம் ஏற்படுமா எனவும் மத்திய நோய்த் தடுப்பு மற்றும் தடுப்பூசி நிபுணர்கள் குழு ஆலோசித்து வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, CoronaVirus, Health and welfare department, India