Home /News /national /

குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்க சென்ற தந்தைக்கு நேர்ந்த சோகம்!

குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்க சென்ற தந்தைக்கு நேர்ந்த சோகம்!

குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்க சென்ற தந்தைக்கு நேர்ந்த சோகம்!

குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்க சென்ற தந்தைக்கு நேர்ந்த சோகம்!

லால் தனது மனைவி ரேகா மற்றும் 12, 10, 6 வயதிலான 3 மகள்கள் மற்றும் 2 வயது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

    குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்க வேண்டும் என்பதை மறக்காமல் இருந்திருந்தால் 4 குழந்தைகளுக்கு தந்தையான கிர்தார் லால் தற்போது உயிருடன் இருந்திருப்பார்.

    டெல்லியின் முக்கிய சாலையில் உள்ள கடையில் புதன்கிழமையன்று காலையில் தனது நண்பர் ஷரஃபத் அலியுடன், கிர்தார் லால் (39) டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது, தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் அங்கு பார்சல் டீ வாங்கி சென்றுள்ளார். அப்போது பாதி தூரத்தை கடந்த பின்னர் தான் குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்கவில்லை என்பது லால் நினைவுக்கு வந்துள்ளது.

    இதையடுத்து, லால் தனது நண்பர் அலியிடம் பிஸ்கட் வாங்க மறந்ததை கூறி, மீண்டும் கடைக்கு சென்று வாங்கி வருவதாக தெரிவித்துள்ளார். அதற்கு நண்பர் அலி, வேண்டாம் இதற்காக திரும்ப செல்லாதே என்று கூறியுள்ளார். எனினும், மனம் கேட்காத லால் சாலையை கடந்து சென்று பிஸ்கட் வாங்கிவிட்டு மீண்டும் சாலையை கடந்துள்ளார். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த மஹிந்திரா தார் ஜீப், ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் லால் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    இதையடுத்து, படுகாயமடைந்த லாலை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் லால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க - 'மது குடிப்பவர்கள் இந்தியர்களே கிடையாது; அவர்கள் மகா அயோக்கியர்கள்' - நிதிஷ் குமார் கடும் தாக்கு

    லால் தனது மனைவி ரேகா மற்றும் 12, 10, 6 வயதிலான 3 மகள்கள் மற்றும் 2 வயது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். அவர் சாலை விபத்தில் உயிரிழந்தது அந்த குடும்பத்திற்கு பெரும் இடியாக அமைந்துள்ளது.

    இதுதொடர்பாக உயிரிழந்த லாலின் சகோதரி ஜான்சி கூறும்போது, எங்களுக்கு நடந்தது என்ன என்பது குறித்து சரியாக தெரியாது. ஆனால், சிசிடிவி காட்சிகளை பார்க்கும் போது, இது விபத்து போன்று தெரியவில்லை. அது திட்டமிடப்பட்டது போல் தெரிகிறது. எனது தம்பியும், அவனது மனைவியும் ஒப்பந்த கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தனர். அவனுக்கு தினசரி ரூ.800 சம்பளம், அவனது மனைவிக்கு ரூ.400 சம்பளம், இதை வைத்து தான் அவர்கள் குடும்பத்தை நடத்தி வந்தனர்.



    ஆனால், இப்போது ரேகா தனியாக எப்படி குழந்தைகளை பார்த்து கொள்வார் என்று நினைக்கும் போது, மிகுந்த கவலையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகளில், வேகமாக வரும் சிவப்பு நிற மஹிந்திரா ஜீப், வண்டியை நிறுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை என்பது தெரிகிறது. மேலும், இடதுபக்கத்தை முழுவதுமாக கடந்த போதிலும், அவர் மீது அந்த ஜீப் மோதுவது தெரிகிறது. தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தார் ஜீப் ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    அந்த நபர் அருண் (27) என்பதும் அவர் வாடகை காரில் தனியாக வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நேர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Accident, Mahindra, Road accident

    அடுத்த செய்தி