போனி கபூர்- ஸ்ரீ தேவியின் மகளான ஜான்வி கபூர் நேற்று திருப்பதிக்கு கோயிலுக்கு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜான்வி கபூர் பாலிவுட்டில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கான ரசிகர் கூட்டம் அதிகம்.
நடிகை ஜான்வி கபூர் 2018 ஆம் ஆண்டு வெளியான ‘தடாக்’ என்ற படம் மூலம் அறிமுகமானார். வளர்ந்து வரும் நடிகையான ஜான்வி கபூர் திருப்பதி கோவிலில் விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டார்.
சாமி தரிசனத்திற்காக இரவு திருப்பதி மலைக்கு நடந்து படியேறி வந்த அவர் திருமலையில் இரவு தங்கி இன்று காலை கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.
Also see... திருப்பதி தரிசன நேரத்தில் மாற்றம்... டிசம்பர் முதல் அமலாகும் புதிய விதி!
சாமி கும்பிட்ட பின் அவர் கோவில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த, பிரசாதங்களை பெற்று கொண்டார். அப்போது பாரம்பரிய உடையான பாவாடை தாவணியில் சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Janhvi kapoor, Tirupati